'இந்திய ராணுவத்தினர் பத்துப் பேரை விடுவித்தது சீனா'

மேஜர் இருவர் உட்பட இந்திய ராணுவத்தினர் பத்துப் பேரைப் பிடித்து வைத்திருந்த சீனா நேற்று (ஜூன்18) மாலையில் விடுவித்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதி இரவு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. பல மணி நேரமாக நீடித்த இந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர்; குறைந்தது 76 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எந்த ஒருவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் இந்தியா ராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

தனது தரப்பிலும் உயிருடற் சேதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட சீனா, ஆனாலும் அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

இதனிடையே, இந்திய ராணுவத்தினர் எவரையும் தான் பிடித்து வைத்திருக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸாவ் லிஜியன் கூறியிருப்பதாக ஒரு சீன ஊடகத்தைச் சுட்டி ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல, தன் படையினர் பத்துப் பேரை சீனா விடுவித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

1962ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் உயிரிழப்பு நிகழும் வகையில் மோதிக்கொண்டது இதுவே முதன்முறை.

இதையடுத்து, இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் முன்வந்துள்ளன.

மோதலைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்திற்கு இடையே சிலமுறை பேச்சுவார்த்தை நடந்து உள்ளபோதும் இன்னும் உறுதியான ஒரு முடிவு எட்டப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, போர் விமானங்கள் உள்ளிட்ட தனது தளவாடங்களை இந்திய விமானப் படை முக்கிய தளங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ்.படோரியா, இரு நாள் பயணமாக காஷ்மீரின் லே, ஸ்ரீநகர் விமானப் படைத்தளங்களுக்குச் சென்று, தமது படைகள் தயார்நிலையில் உள்ளனவா எனப் பார்வையிட்டு வந்ததாகவும் அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி ‘ஏஎன்ஐ’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா 10,000த்திற்கும் மேற்பட்ட படைவீரர்களைக் குவித்துள்ளதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறின.

மோடி ஆலோசனை

இதற்கிடையே, எல்லையில் நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கேதுவாக, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லாக் கட்சித் தலைவர்களையும் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள தமக்கு அழைப்பில்லை என்றபோதும் நாட்டிற்கும் பாது காப்புப் படையினருக்கும் துணை நிற்போம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!