குருத்து மட்டைக்கு ஈடான பழுப்பு மட்டை

பழுப்பு மட்­டை­யைப் பார்த்து குருத்து மட்டை சிரித்­ததுபோல் வாழக்­கூ­டாது என்­கி­றார் 70 வயது சுப்­பி­ர­ம­ணி­யன்.

“வய­தான காலத்­தில் உறு­து­ணை­யாக மனைவி இருந்­தா­லும் ஆத­ரிக்க பிள்ளைகள் இருந்­தா­லும் உல­கிற்­கும் சரி, உற­வுக்­கும் சரி, ஊருக்­கும் சரி யாருக்­கும் சுமை­யாக வாழக்­கூ­டாது. இதற்குக் கைத்­தொ­ழில்­தான் கைகொடுக்­கும்,” என்று சொல்­லும் இந்­தப் பெரி­ய­வர் முட்டம் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்.

கீற்று முடை­வது, மூங்­கில் படல் போடு­வது போன்ற வேலை­கள் இவருக்குக் கைவந்த கலை. மற்ற வேலை­க­ளை­யும் செய்­வ­துண்டு.

“வய­தாக வய­தாக ஏதா­வது ஒரு வேலை­யில் ஈடு­ப­ட­வேண்­டும், சும்மா இருக்­கவே கூடாது,” என்ற திரு மணி­ய­னுக்கு இரு மகள்­கள், ஒரு மகன். அனை­வ­ருக்­கும் மண­மாகி அவ­ர­வர் குடும்­பத்­தைப் பார்த்­துக்­கொள்கிறார்­கள்.

கிரா­மத்­தில் பிர­தான சாலை­ ஓ­ர­மாக இவ­ரின் குடிசை வீடு இருக்­கிறது. பக்­கத்­தில் ஒரு பெரிய குளம். திரு மணியன், அந்தக் குளத்தில் ஊறப்­போட்­டி­ருந்த தென்­னங்­கீற்றை மட்­டை­யாக முடைந்­து­கொண்டு இருந்­தார்.

“ஒரு நாளில் 30 தென்னை மட்டைகள், அதா­வது அறு­பது கீற்­று­கள் முடை­வேன்.

“ஒரு நாளில் 12 அடி நீள­முள்ள ஆறு மூங்­கில் படல்­க­ளைப் போடுவேன்.

“மூங்­கில் முள் வாங்­கி படல்­போட்டு ஒரு படல் ரூ.120 வரை விற்­பேன். யாராவது கூப்பிட்டால் போவேன். ஒரு படல் போட்­டுக் கொடுக்க ரூ. 60 கூலி தரு­வார்­கள். படிச்­செ­லவு தனி.

“கீற்று முடைய சம்­ப­ளத்­திற்­குக் கூப்­பிடுவார்­கள். ஆனால் ரூ.300தான் ஊதியம் கொடுப்­பார்­கள். அது கட்­டுப்படி­யா­காது. ஆகை­யால், மட்டை முடைய கூலி வேலைக்­குச் செல்­வ­தில்லை,” என்றார் திரு மணி­யன்.

“மட்­டை­க­ளைத் தலா இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கு வாங்கி குளத்­தில் இரண்டு நாள் ஊற­வைத்து முடைந்து ஒரு மட்டை 10 ரூபாய்க்கு விற்­பேன். நான் வசிக்­கும் குடிசை வீட்டிற்குத் தேவை­யான கீற்­று­களை ஆறு மாதங்­களுக்கு ஒருமுறை என்று நானே முடைந்து வேய்ந்துவிடு­வேன்.

“குடிசை வீடு­கள் மறைந்து வரு­கின்றன. அதனால், வீடு­க­ளைப் பொறுத்­த­வரை கீற்­றுக்­குத் தேவை குறைந்­துவிட்­டது. கோயில் திரு­விழாக்கள், திரு­ம­ணம், வீட்டு நிகழ்ச்சிகள், பந்­தல், கொட்டகை போன்­ற­வற்­றுக்­குக் கீற்று தேவைப்­ப­டு­கிறது. தென்னங்கீற்­றைப் பொறுத்­த­வரை இளம் மரத்துக் கீற்­று­தான் சரிப்­பட்டுவரும். கீற்­றில் ஒவ்­வோர் ஓலை­யும் சுருங்­கா­மல் இருக்­கும்.

“ஊற­வைத்து முடை­யும்­போது கீற்று அக­ல­மாக இருக்­கும். முதிய மரத்­தின் கீற்­று­கள் சுருங்கி இருக்­கும்.

“வீடு­க­ளி­லும் நிரந்­த­ர­மா­கப் போடப்­படும் கொட்­ட­கை­க­ளி­லும் நெருக்­க­மாகக் கீற்றை வேய்ந்­தால் ஆண்­டுக்கணக்­கில் அப்­ப­டியே இருக்­கும். கோடை­யில் குடிசை வீட்­டில் இயற்­கை­யி­லேயே வெப்பம் குறை­வாக இருக்­கும். உடலுக்கு மிக­வும் நல்­லது,

“ஆனால், அடிக்­கடி கீற்றை மாற்ற வேண்­டும்; பராமரிக்க வேண்டும். இந்தக் கால­த்தில் கூரை வீட்டை அவ்வ­ள­வாக யாரும் விரும்­பு­வ­தில்லை. அதி­கம் மெனக்­கட வேண்­டும் என்­ப­து­தான் அதற்குக் கார­ணம்.

“கிரா­மப்­பு­றங்­களில் மூங்­கில் பட­லுக்கு இன்­னும் கிராக்கி இருக்­கிறது.மூங்­கில் குத்­தில் முள்ளை அறுத்து எடுத்து படல் போடு­வது என்­பது மிக­வும் சிர­ம­மான ஒரு தொழில்.

“பொது­வாக மூங்­கில் குத்து உரிமையாளர்­கள் முள்ளை வெட்­டிக்­கொள்­ளச் சொல்­வார்­கள்; வெட்டி விற்க மாட்டார்கள். யாருக்­குத் தேவையோ அவர்கள்­தான் வெட்டி படல் போட வேண்­டும். அப்­படி முள்ளை வெட்டி படல் போடுவோர் என்னை வேலைக்­குக் கூப்­பிடுவார்­கள்,” என்­றார் திரு மணி­யன்.

“வயிறு கள்ளு கொள்­ளும். படல் முள்ளு கொள்­ளும் என்று ஒரு வழக்கு­மொழி உண்டு. பட­லில் எவ்­வ­ளவு முள் வேண்­டு­மா­னா­லும் சேர்த்து கட்­டிக்கொண்டே இருக்­க­லாம்.

“தென்­னம்­பா­ளையை ஊற­வைத்து கிழித்து அதைக் கொண்­டு­தான் படல் போடு­வது வழக்­கம். இப்­போது பிளாஸ்­டிக் கயிறு வந்­து­விட்­டது. அதைப் பயன்­படுத்­து­கி­றார்­கள்.

“இளம் வய­தில் கடும் உடல் உழைப்பு தேவைப்­ப­டக்­கூ­டிய வேலை­க­ளுக்­குச் சென்ற காலம் எல்­லாம் உண்டு. இப்­போது வய­துக்கு ஏற்ற தொழில்­க­ளைத் தேர்ந்து எடுத்­துக்­கொண்­டேன்.

“என் பிள்­ளை­க­ளைச் சார்ந்து இருக்­கவே மாட்­டேன். என் மனை­வி­யும் இப்­படித்­தான்,” என்று கூறிய திரு மணி­யனுக்­குக் கொஞ்­சம் காது கேட்­காது. சற்று உரக்­கப் பேச வேண்டி இருக்­கிறது.

“வெளியூர்­களில் இருந்து கீற்று வாங்­கிச் செல்ல வரு­வார்­கள். அவர்­களி­டம் மொத்­த­மாக விற்­று­வி­ட­லாம்; சில்­ல­றைக்­கும் விற்­க­லாம். கீற்று முடை­வது, படல்­ போ­டு­வது என்று பாடு­பட்டு நாள் ஒன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக ரூ.400 முதல் ரூ.500வரை சம்­பா­திக்­கிறேன்,” என்று கூறிய திரு மணி­ய­னி­டம் வாழ்க்கை மன­நி­றை­வாக, மனமகிழ்ச்­சி­யாக இருக்­கி­றதா என்று கேட்­டேன்.

“தென்னை மட்­டை­யில்­கூட இளம் மரத்து இளம் மட்­டை­கள்­தான் கீற்­றுக்கு அதி­கம் விரும்­பப்­படும். அதே­போல்­தான் நாமும். வய­தாக ஆக நமது தேவை குறை­யும். இது இயல்­பு­தான்.

“என்­றா­லும், ஏதா­வது ஒரு வழி­யில் எப்­போ­தும் தேவைப்­ப­டக்­கூ­டி­ய­வராக நம்மை நாம் ஆக்­கிக்­கொள்ள வேண்டும்.

“நம் கையில் காசு இருந்­தால்­தான் ஈ, எறும்­பு­கூட நம்மை மதிக்­கும். மனைவியிடத்­தி­லும் மக்­க­ளி­டத்­தி­லும் நமக்­கு கௌர­வம் இருக்­கும்.

“என் போன்ற பாமர மக்­க­ளைப் பொறுத்­த­வரை உழைப்­பை­விட்­டால் வேறு வழி­யில்லை. பழுத்த மட்­டை­யைப் பார்­த்து குருத்து மட்டை சிரித்­த­தைப்­போல் எந்த ஒரு காலத்­திலும் வாழவே கூடாது. இப்படி நாளும் உழைத்து வாழ்­வ­தால் என் வாழ்க்கை மன­நி­றை­வாக மகிழ்ச்சியான­தாக இருக்­கிறது,” என்­றார் திரு மணியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!