குதிரை ஏறி உணவு விநியோகம் செய்யும் ஊழியர்

ஹைதராபாத்: இந்தியாவின் ஹைதராபாத் நகரில், ‘ஸொமேட்டோ’ நிறுவனச் சீருடை அணிந்து அதன் உணவு விநியோகப் பையைச் சுமந்தபடி குதிரையில் செல்லும் ஆடவரின் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

அவர் மிக லாவகமாகக் குதிரைச் சவாரி செய்வதைக் காணொளியில் காண முடிகிறது.

பரபரப்பான சாலையில் அந்த ஆடவர் குதிரையில் சவாரி செய்வதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

எக்ஸ் தளத்தில் இச்சம்பவத்தின் காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் பற்றாக்குறை குறித்த அச்சத்தால் ஹைதராபாத் பெட்ரோல் நிரப்புமிடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் அதனால்தான் ‘ஸொமேட்டோ’ விநியோகிப்பாளர் குதிரையில் செல்ல முடிவெடுத்திருப்பார் என்றும் பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் பெட்ரோல் நிரப்புமிடங்களில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காணொளியில் காணப்படும் ஆடவர் உண்மையிலேயே ‘ஸொமேட்டோ’ ஊழியரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சென்ற ஆண்டு ‘ஸ்விக்கி’ உணவு விநியோக நிறுவனச் சீருடையில் ஆடவர் ஒருவர் குதிரைச் சவாரி செய்த காணொளி இணையத்தில் பரவியது. ஆனால் பிறகு, அவர் அந்நிறுவனச் சீருடையை இரவல் பெற்று அணிந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!