இந்தியா

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 விழுக்காடு நீர் மட்டுமே மிச்சம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.230 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலின்போது ஒரு மூதாட்டியின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை இன்னும் மறைந்து போகாமல் இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலிலும் அவர் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார்.