மிஸ்டர் கியாசும் கார்ஃபீல்ட் பூனையும் இணையும் திடீர் நூலகம்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற கலைஞர் திரு ஜானி லாவ், மிஸ்டர் கியாசு எனும் பிரபல நகைச்சுவைத் தொடரை உருவாக்கிய சிறப்புக்குரியவர்.

அவரது நகைச்சுவைத் தொடரும் 1980களில் உலகமெங்கும் மிக பிரபலமாக வலம் வந்த கார்ஃபீல்ட் பூனையின் நகைச்சுவைத் தொடரும் இணையும் வகையில் புதிதாக ஒரு திடீர் நூலகம் (pop-up library) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தேசிய நூலக வாரியம் கேளிக்கை கதாபாத்திரம் சார்ந்த கருப்பொருளில் அறிமுகப்படுத்தியுள்ள முதல் திடீர் நூலகமாகும். பொதுமக்கள் அங்கு உள்ள மின்னூல்களை இரவல் பெற்று, நகைச்சுவைத் தொடர்களை நூலகத்திற்குள் படித்து மகிழும் அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

தேசிய நூலக வாரியம் ‘முனைகள்’ என்னும் அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வித்தியாசமான நூலக அனுபவத்தைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதத்தில் திடீர் நூலகத்தை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு தனித்துவமான அனுபவமாக இருக்கும் வகையில் மிஸ்டர் கியாசு நகைச்சுவைத் தொடரில் இடம்பெறும் வீவக வீடு மாதிரியான வடிவமைப்பில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கார்ஃபீல்ட் மின்னகைச்சுவைத் தொடருக்கு அப்பாற்பட்டு வாசகர்கள், சமையல், பொழுதுபோக்கு, உடல்நலம் ஆகிய தலைப்புகளில் இருக்கும் மின்னூல்களை நூலகத்தின் சுவரில் இடம்பெற்றுள்ள கியூஆர் குறியீட்டை வருடி இரவல் பெறலாம்.

பொதுமக்கள் நூலகத்தில் திரு ஜானி லாவ் கருத்துருவாக்கிய தனிச்சிறப்பான சுவரோவியத்தையும் கண்டுகளிக்கலாம். அந்தச் சுவரோவியம் மிஸ்டர் கியாசுவுக்கும், கார்ஃபீல்டுக்கும் இடையிலான உறவைப் பறைசாற்றும் விதமாகவும் மிஸ்டர் கியாசு கார்ஃபீல்ட் பூனையை சிங்கப்பூருக்கு வரவழைத்து சிங்கப்பூரின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றான லக்சாவை சுவைத்துப் பார்க்க சொல்லும் விதமாகவும் பார்வையாளர்களுக்குக் காட்சியளிக்கும்.

மிஸ்டர் கியாசு கார்ஃபீல்ட் பூனையுடன் நிற்கும் காட்சியை நூலகத்தில் பொதுமக்கள் காணலாம். அங்கு சமூக ஊடக தளங்களில் பதிவேற்றம் செய்யும் அளவில் அழகான புகைப்படங்களையும் எடுத்து மகிழலாம். அத்துடன், கார்ஃபீல்ட் நகைச்சுவைத் தொடர் தொடர்ந்து காட்சி பெறும் வசதியும் நூலகத்தில் உள்ளது.

கார்ஃபீல்ட் பூனை ரசிகர்கள் வரும் வாரங்களில் அதை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்று கொள்ளலாம். தேசிய நூலக வாரியம் அதற்கான மேல் விவரங்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவிக்கும்.

அதையடுத்து, பொதுமக்கள் திரு ஜானி லாவ் நன்கொடையாக அளித்த கிட்டத்தட்ட 120 மிஸ்டர் கியாசும், கார்ஃபீல்ட் நகைச்சுவைத் தொடர்களையும் நூலகத்தில் தேடிப் பார்த்துப் படிக்கலாம். அந்த நகைச்சுவைத் தொடர்களை இரவல் பெற முடியாது.

ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் தி சென்டர்பாயிண்ட் கடைத் தொகுதியின் முதல் மாடியில் திடீர் நூலகம் அமைந்துள்ளது. நூலகம் நாள்தோறும் காலை 10 மணியிலிருந்து, இரவு 10 மணி வரை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை செயல்படும். சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் நூலகத்துக்கு வருகை தரலாம்.

தேசிய நூலக வாரியத்தின் (தமிழ்மொழி) சீன, மலாய், தமிழ்த் தொகுப்பின் நூலகரான சைனப், 27, “பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் முனைப்பில் நாங்கள் பிரபலமான கேலிச்சித்திர கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறு ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம். முனைகள் என்ற எங்களின் திட்டத்தின் மூலம் மக்கள் எளிதாக நூலக வளங்களை அணுக வேண்டும் என்பதற்காகவும் இதனை மேற்கொண்டுள்ளோம்,” என்று பகிர்ந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!