ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன் கோழி விநியோகம் சீராகும்: மலேசியா

மலேசியாவில் ஏற்பட்டுள்ள கோழிகள் விநியோகத் தட்டுப்பாடு இன்னும் ஒரு மாதத்தில் சீராகும் என அந்நாட்டின் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய கோழிகள இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஹஜ்ஜுப் பெருநாள் ஜுலை 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோழி பண்ணையாளர்கள், விநயோகம் செய்பவர்கள் ஆகியோருடன் இணைந்து அரசாங்க அமைப்புகள் பணியாற்றிவருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

கோழிகளின் விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர மலேசியா அரசாங்கம் கோழிகள் ஏற்றுமதி செய்வதை அண்மையில் தடைசெய்தது. இதோடு கோழி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க விலை வரம்பையும் அறிமுகப்படுத்தியது. ஒரு கிலோ கோழி 8.90 ரிங்கிட் வரை விற்க அனுமதிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம், கோழிப் பண்ணையில் ஆள்பற்றாக்குறை, கோழிகளிடையே பரவும் நோய்கள் போன்ற காரணங்களால் மலேசியாவில் கோழி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!