'பாதுகாப்பான இடைவெளியை' வலியுறுத்த மாறுபட்ட உத்திகளைக் கையாளும் இணையவாசிகள்

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்வேளையில், ‘பாதுகாப்பான இடைவெளியை’ உறுதிசெய்வதை வலியுறுத்தும் விதமாக பாடல், ஆடல், மீம்ஸ் என்று சமூக ஊடகங்களில் வெளியிட்டு இணையவாசிகளும் தங்களது பங்கையாற்றி வருகின்றனர்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகளுக்கும் என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக கூரை ஒன்றின் மீது ஐந்து பூனைகள் இடைவெளி விட்டு படுத்திருப்பதைக் காட்டும் ‘மீம்’ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உணவுக் கடை ஒன்றில் சமைத்த கோழிகளுக்கிடையே இடைவெளி இருக்குமாறு அவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தார் கடைக்காரர். அதனைப் புகைப்படம் எடுத்து ‘மீம்ஸ்’ ஆக்கிவிட்டார் இணையவாசி ஒருவர்.

அதேபோல, *V_R_S* என்று பதிவிட்டு, ‘நானும் (I) நீயும் (U) தான் கொரோனா சங்கிலிப் பரவலை உடைக்க முடியும்’ என்று பொருள்படும் ‘மீம்’ ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

வலைப்பதிவாளர்களான mrbrown என பலராலும் அறியப்படும் லீ கின் முன், Miyagi என்று இணையவாசிகளால் அறியப்படும் பெஞ்சமின் மியாகி லீ ஆகிய இருவரும் 2010ஆம் ஆண்டு தேசிய தினத்தில் பிரபலமான ‘One People, One Nation, One Singapore பாடலை தங்களது வீடுகளிலிருந்த வண்ணம் இணைய வசதியைப் பயன்படுத்தி ‘ஸ்மியூல்’ போன்றதொரு பாடல் பதிவினை வெளியிட்டிருந்தனர். அதில் தற்போதைய கொவிட்-19 சூழலையும் இணைத்து வரிகளை உருவாக்கி பாடலை மேலும் சுவையாக்கியிருந்தனர் அவர்கள். அதேபோல மற்றவர்களையும் வீடுகளிலிருந்தே இதேபோல பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்ற உற்சாகமும் அளித்திருந்தனர்.

நியூஸிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (மீட்பு விமானம்) மூலம் வந்து கொண்டிருந்த ஆறு மாணவர்கள், இந்த இக்கட்டான சூழலில் தங்களைத் தாயகம் அழைத்து வரும் விமானிகள், விமான ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாடலைப் பாடி, அதற்கேற்ற நடனத்தையும் ஆடினர். அதனைக் காணொளியாக்கி இணைய வெளியில் உலவ விட்டனர். காணொளி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது நியூசிலாந்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#சிங்கப்பூர் #கொவிட்-19 #பாதுகாப்பான இடைவெளி #மீம்ஸ் #காணொளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!