நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் துணைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க இது வழிவகுக்கும்.
பிரதமர் லீ சியன் லூங் விடுப்பில் இருக்கும்போது, திரு வோங் இடைக்காலப் பிரதமராக செயலாற்றுவார்.
திரு வோங் தொடர்ந்து நிதியமைச்சராக பொறுப்பில் இருப்பார்.
திரு ஹெங் சுவீ கியட் தொடர்ந்து துணைப் பிரதமராகவும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருப்பார்.