அரசாங்கத்துடன் இணைந்து பங்காற்றவும் யோசனைகள் கூறவும் புதிய அலுவலகம்

குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூரர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அதிக இடத்தை உருவாக்க புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த சிங்கப்பூர் அரசாரங்கப் பங்காளித்துவ அலுவலகம் முன்னேறும் சிங்கப்பூர் திட்ட அறிக்கையின் பரிந்துரைகளில் ஒன்று.

பங்களிக்க விரும்பும் குடிமக்களுக்கும் தொடர்புடைய அரசு நிறுவனங்களுக்கும் இடையேயான இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை ஈடுபடுத்துவதற்கான தேசிய முயற்சிகளை அந்த அலுவலகம் வழிநடத்தும்

பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவது ஒற்றுமையை வளர்க்கும் என்ற நம்பிக்கையில், தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பரந்துபட்ட மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் அமைகிறது.

சில துறைகளில் அரசாங்கம் தன் பங்கைக் குறைத்துக்கொண்டு, குடிமக்களின் பங்கை அதிகரிப்பது சிறப்பானது என்பதை என்பதை அங்கீகரிப்பதாக அறிக்கை கூறியது.

“எனவே குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க புதிய வழிகள் அறிமுகப்படுத்தப்படும். சிங்கப்பூரர்கள் தங்கள் சமூகங்களை வடிவமைக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளும் அதிகளவிலான அடித்தளத்திலிருந்து தொடங்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

அரசாங்கம் அனைத்து பங்குதாரர்கள், பங்காளிகளின் கருத்துகளைப் பெற்று அணுக்கமாகப் பணியாற்றும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தலைமையிலான நான்காம் தலைமுறைத் தலைவர்களால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

குடிமக்கள் பங்கேற்பு மற்றும் அடிப்படையிலிருந்து தொடங்கப்படும் முயற்சிகளுக்கு கூடுதல் வழிமுறைகளை உருவாக்குவதுடன், ஈகைப் பண்பாட்டை வளர்ப்பதற்கும் மக்கள் தங்கள் சக சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதற்குமான வழிகளையும் அறிக்கை கோடிட்டுள்ளது.

16 மாத கால ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல்களில் 200,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வழங்கிய பரிந்துரைகளை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“மக்களை ஈடுபடுத்தும் கலந்துரையாடல் என்பதற்கும் மேலாக, இது ஒரு பங்காளித்துவ முயற்சி. அரசாங்கம், மக்கள், சமூகக் குழுக்கள், முதலாளிகள், வணிகங்களுக்கு இடையிலான முத்தரப்புக் கூட்டணியை உள்ளடக்கியது,” என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய துணைப் பிரதமர் வோங் கூறினார்.

“இது உண்மையில் ஒட்டுமொத்த சிங்கப்பூரின் பங்காளித்துவம். பெரிய மாற்றங்களை ஒன்றிணைந்து செயல்படுத்த ஒரே வழி இதுதான்,” என்றார் அவர்.

துடிப்பான, செழிப்பான, மீள்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். அதில் நடுத்தர மக்கள் முன்னேற்றம் காண்பார்கள், பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் கவனிப்பைப் பெறுவார்கள். சிறந்த நிலையில் இருப்பவர்கள் சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் பங்கை ஆற்றுவார்கள் என்று அறிக்கை சுட்டியது.

சிங்கப்பூர்வாசிகள், குறிப்பாக சிறந்த நிலையில் இருப்பவர்களும் சமுதாயத்தால் பயனடைந்தவர்களும் சமுதாயத்துக்கு திரும்பக் கொடுக்க முன்வர வேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.

இது நிதி நன்கொடைகள், அறிவைப் பகிர்வது அல்லது சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற வழிகளில் அமையலாம்.

இந்த நோக்கத்திற்காக, நன்கொடையாளர்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இது சிங்கப்பூர் சமூக அறநிறுவனம், சமூக உண்டியல் ஆகியவற்றுடன் இணைந்து செய்யப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நன்கொடையாளர் பல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிதி ரீதியாக மட்டுமின்றி, அவர்களின் சமூக மூலதனத்தையும் தொடர்புகளையும் வளர்க்க வழிகாட்டுதல், பயிற்சி, வேலை வாய்ப்புகள் போன்ற துறைகளிலும் உதவ முடியும்.

ராமகிருஷ்ணா மிஷன் அறநிறுவனத்தை நிறுவிய கோவிந்தசாமி பிள்ளை, ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலைக் கட்ட நிலம் வழங்கிய ஹாஜா பாத்திமா, டான் டோக் செங் மருத்துவமனையாக உருவாகியுள்ள கட்டடத்திற்கு நிதி வழங்கிய டான் டோக் செங் போன்ற வணிகர்களை கொடை வள்ளல்களாக அடையாளப்படுத்தியது.

சமூகத்திற்குப் பயனளிக்கும் வணிக நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைப்பதில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட, தேசிய தொண்டூழிய, கொடைவள்ளல் மையம் புதிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளது. 55 நிறுவனங்கள் இந்த நிறுவன கட்டமைப்பை ஏற்றுக்கொண்டன.

மே மாதம் தொடங்கப்பட்ட இளையர் குழுக்கள் மூலம் இளையர்கள் கொள்கைகள் குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்த கலந்துரையாடல்கள் நிதிப் பாதுகாப்பு, தொழில், வாழ்நாள் கற்றல், மின்னிலக்க நல்வாழ்வு, சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றைக் கவனிக்கும்.

முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல்களில் வெளிப்பட்ட இளையர்களின் சில முக்கிய கவலைகளாக, எதிர்காலத்தில் வேலைகள், தொழில் தேர்வுகள், மன நலம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவை என்று திரு வோங் கூறினார்.

ஒற்றுமையை வளர்ப்பதில் மற்றொரு அம்சம் பல இன சமூகத்தையும் சிங்கப்பூர் அடையாளத்தை வலுப்படுத்துவதை உள்ளடக்கியது என்று அறிக்கை கூறியது,

பல்வேறு குழுக்களிடையே அதிக தொடர்புகளுக்கான தளங்களை தொடர்ந்து விரிவாக்குதன் மூலம் அரசாங்கம் தனது பங்கை ஆற்றும்.

பல்வேறு சுயஉதவிக் குழுக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அதிகமான சிங்கப்பூரர்கள் சமூகத்தில் இன நல்லிணக்கத் திட்டங்களில் ஈடுபட ஊக்குவிக்கவும் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை கூறியது.

கரையோரப் பூந்தோட்டங்களில் உள்ள சில்வர் கார்டனில் வெள்ளி முதல் ஞாயிறு வரை நடைபெறும் முன்னேறும் சிங்கப்பூர் விழாவில் இந்த முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

அதன் பிறகு அந்த விழா சாலைக் காட்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் 2024 ஜனவரி 28ஆம் தேதி வரை இடம்பெறும். இதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றிருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!