கொவிட்-19 தொற்றை நினைவுகூர புதிய ஒலி-ஒளிக் கண்காட்சி

கொவிட்-19 கிருமித்தொற்றை உலகெங்கும் பேரளவில் பரவும் நோயாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து, வரும் மார்ச் 11ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.

இதனை நினைவுகூரும் நோக்கில் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை சன்டெக் சிட்டி ஏட்ரியம் (மாநாட்டு மையம்) அரங்கில் ‘ஃபைசர் சிங்கப்பூர்’ ஒரு கண்காட்சியை நடத்துகிறது.

‘புரோஜெக்ட் வேக்ஸ்: எது முக்கியமோ அதைத் தற்காக்கவும்’ என்ற பெயரிலான இக்கண்காட்சி, சிங்கப்பூரின் கொவிட்-19 தொற்றுக்கால முக்கிய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகிறது.

2020க்கு அழைத்துச் செல்லும் ‘ஃபைசர் கியூப்’புடன் தொடங்கி, ஒளியூட்டப்பட்ட சுரங்கப்பாதையுடன் நிறைவடைகிறது இக்கண்காட்சி.

ஒளியூட்டப்பட்ட சுரங்கப்பாதையில் பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19 தொற்று குறித்துக் கூறிய சொற்கள் ஒலிக்கும். படம்: ரவி சிங்காரம்

கண்கவர் ஒளிக் காட்சிகள், முகக்கவசங்களாலான புகைப்படச் சாவடி, கொவிட்-19 தடுப்பூசியின் பின்னணியில் உள்ள அறிவியல் விளக்கங்கள் ஆகியவற்றையும் காணமுடியும்.

ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட சிங்கப்பூரர்களை ஒன்றிணைப்பதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.

அதனால், ஆரோக்கிய வாழ்வு சார்ந்த ஆறு ஓவியங்களும் காட்சிப்படுத்தப்படும். அவற்றை உருவாக்கிய உள்ளூர் ஓவியர் ஆ குவோவை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி பொதுமக்கள் சந்திக்கலாம்.

பொதுமக்கள் ஆரோக்கிய வாழ்வு சார்ந்த தங்கள் உறுதிமொழிகளைக் கண்காட்சிச் சுவர்களில் ஒட்டலாம். படம்: ரவி சிங்காரம்

வார இறுதியின் இரு நாள்களிலும் மீடியாகார்ப் கலைஞர்கள் வருகையாளர்களை மகிழ்விப்பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!