லாரன்ஸ் வோங்

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஏப்ரல் 8லிருந்து 10ஆம் தேதிவரை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார்.
ஏற்றமதி, சுற்றுப்பயணத்துறை ஆகியவை மீண்டு வந்திருப்பது பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் 2023ஆம் ஆண்டில் இருந்த பொருளியல் நிலையைவிட இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இருந்தவாறு ஒருவர் தனது அடையாளத்தைக் கண்டுகொள்ளும்போது அதனால் தனக்கு உறவும் உறுதியும் இருப்பதை அவர் உணர்வார்.
கூடுதல் தேவைகளுடையோர், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் உதவி அவர்கள் செலுத்தும் வரிகளைக் காட்டிலும் அதிகம் என்பதை சிங்கப்பூரின் நியாயமான, முற்போக்குடைய நிதி அமைப்புமுறை உறுதிப்படுத்துவதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
உடனடி அக்கறைகளை எதிர்கொள்வது மட்டுமின்றி, எதிர்காலத்துக்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்த இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கொள்கை ரீதியாகப் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.