சிங்கப்பூர்

கடந்த இருபது ஆண்டுகளில் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. பல விவகாரங்களில் பங்கேற்று உலக வரைபடத்தில் தனது இடத்தைப் பாதுகாத்து கொண்டுள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
பசுமைப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையிலான ஒத்துழைப்பு தொடரும் நிலையில், இந்தோனீசியாவின் எதிர்காலத் தலைநகரான நுசந்தாராவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
போகோர்: பிரதமர் லீ சியன் லூங்கும், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஏப்ரல் 29ஆம் தேதி இரு நாட்டு ஒத்துழைப்பை வருங்காலத்திலும் தொடர உறுதியளித்தனர்.
சிங்கப்பூரைத் தொடர்ந்து சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வகையில் பொதுச் சுகாதார மன்றத்தின் திட்டத்தில் ஓசிபிசி வங்கி, போக்குவரத்து சேவையில் உள்ள எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.
மெடெய்ரா: போர்ச்சுகலின் மெடெய்ரா பகுதியில் நடைபெறும் சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.