சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: ஆந்திராவில் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடல்நிலை காரணங்களுக்காக நான்கு வார காலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலால், அரசுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
ஹைதராபாத்: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) அதிகாரிகளால் செப்டம்பர் 9ஆம் தேதி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டாா்.
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜமுந்திரி: சிறை வைக்கப்பட்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர்.