அதிபர்

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், புதன்கிழமை (மார்ச் 27) அமெரிக்க அதிகாரிகளையும் கல்விமான்களையும் பெய்­ஜிங்­கில் உள்ள மக்­கள் மாமண்­ட­பத்­தில் சந்தித்ததாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
தைப்பே: அதிபர் சாய் இங்-வென் தென்சீனக் கடற்பகுதிக்குத் தற்போது செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, மார்ச் 21ஆம் தேதி, தைவானின் பாதுகாப்பு உயரதிகாரி கூறியுள்ளார்.
இஸ்தான்புல்: உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாகத் துருக்கிய அதிபர் ரிச்செப் தயிப் எர்துவான் கூறியிருக்கிறார்.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நூலாசிரியர், கொடை வள்ளல், சமூக சேவையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருமதி சுதா மூர்த்தியை அதிபர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக் மெக்கால், தைவானின் புதிய அதிபராகத் திரு லாய் சிங்-டே பதவியேற்கும் நிகழ்ச்சிக்குத் தாம் செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார்.