ரயில் சேவை

தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டத்தை, தற்போதைய ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் தடப் பணிகள் திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவடைந்துவிட்ட நிலையில், கென்ட் ரிஜ் நிலையத்திற்கும் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்கும் இடையே ஏப்ரல் 6 முதல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தப் பாதையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.
வட்ட ரயில் பாதையின் ஹார்பர்ஃபிரண்ட், தெலுக் பிளாங்கா நிலையங்களில் தலா ஒரு தளமேடை ஜனவரி 2ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் புதிய ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டணம் போட்டித் திறன்மிக்கதாக இருக்கும். அந்தத் திட்டம் நிறைவடையும்போது கட்டணம் பற்றி முடிவு செய்யப்படும்.