விமானி

புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
பறந்த தமது போர்ச் சிறகுகள் ஒய்ந்த பின்பும் தொடர்ந்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஒருவர்தான் கர்னல் குஹராஜசிங்கம் கரலசிங்கம், 72.
ஜகார்த்தா: விமானப் பயணத்தின்போது இரு விமானிகள் தூங்கிவிட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ‘பத்திக் ஏர்’ உள்ளூர் விமான நிறுவனத்திடம் தான் விசாரணை நடத்தப்போவதாக இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.