நெரிசல்

கௌசியுங் சிட்டி: தைவானின் கௌசியுங் சிட்டி நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் திக்குமுக்காடி ஓட ஆரம்பித்தனர். அதனால் சிலர் காயமுற்றனர்.
கூலாய்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிங்கப்பூரிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஜோகூருக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகள், குடிநுழைவு சோதனைகளை முடிக்க ஏறக்குறைய மூன்று மணி நேரம் காத்திருக்க நேரிடலாம் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் (டிசம்பர் 24) மாலை நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோரும் கடைசி நேரத்தில் பண்டிகைக்கான பொருள்களை வாங்க விரும்புவோரும் அங்கு செல்வதற்குமுன் கூட்ட நெரிசல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இயலும்.
பினாங்கு விமான நிலையத்தின் குடிநுழைவு முகப்புகளில் மூன்று முதல் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பயணிகள் சிலர் விரக்தியடைந்தனர்.