மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த துளசேந்திரபுரம் கிராமம்

அமெ­ரிக்க துணை அதி­ப­ராக தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்ள திரு­வாட்டி கமலா ஹாரிஸ், 55, பல சாத­னை­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ரர் ஆகி­யுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் துணை அதி­பர் பத­வி­யில் அம­ரும் முதல் பெண். முதல் இந்­திய-மேற்கிந்திய பெண். தெற்­கா­சி­யா­வைச் சேர்ந்த முதல் அமெ­ரிக்­கப் பெண். தமிழ்­நாட்­டைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட முதல் பெண். இப்­படி அவ­ருக்­கான சாத­னைப் பட்­டி­யல் நீளு­கிறது. அமெ­ரிக்க தேர்­தல் வர­லாற்­றில் இதற்கு முன்­னர் இரு பெண்­கள் துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யிட்­ட­னர். 1984ஆம் ஆண்­டில் ஜன­நா­ய­கக் கட்­சி­யைச் சேர்ந்த ஜெரல்­டின் ஃபெராரோ, 2008ஆம் ஆண்­டில் குடி­ய­ர­சுக் கட்சி சார்­பாக சாரா பாலின் ஆகியோர் அந்­தப் பெண்­கள். ஆனா­லும் இவ்­விரு பெண்­களும் தேர்­த­லில் வெற்றி பெற­வில்லை.

இந்­தத் தேர்­த­லுக்கு முன்­பு­வரை அமெ­ரிக்­கா­வின் இரு­

பெ­ரும் கட்­சி­க­ளான குடி­ய­ர­சுக் கட்­சி­யும் ஜன­நா­ய­கக் கட்­சி­யும் இது­வரை கறுப்­பி­னப் பின்­ன­ணி­யைக் கொண்ட ஒரு­வரை வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்­கி­ய­தில்லை.

திரு­வாட்டி கம­லா­வின் தாயார் திரு­வாட்டி சியா­மளா கோபா­லன் தமி­ழ­கத்­தின் மன்­னார்­குடி அருகே உள்ள துள­சேந்­தி­ர­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் என்­பது பல­ரும் அறிந்­ததே. இம்­மா­தம் 3ஆம் தேதி அதி­பர் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடை­பெற்ற நேரத்­தில் திரு­வாட்டி கமலா வெற்­றி­பெற வேண்டி துள­சேந்­தி­ர­பு­ரம் கிரா­மத்­தில் உள்ள அவ­ரது தாய்­வழி குல­தெய்­வ­மான அய்­ய­னா­ருக்கு பூசை செய்து சிறப்பு வழி­பா­டு­கள் நடத்­தப்­பட்­டன. அவர் வெற்­றி­பெற வாழ்த்தி கிரா­மம் முழு­வ­தும் ஏரா­ள­மான பதா­கை­கள் வைக்­கப்­பட்டு இருந்­தன. துணை அதி­ப­ராக வென்­று­விட்­டார் என்ற தக­வல் நேற்­றுக் காலை வெளி­யா­ன­துமே சுமார் 350 பேர் வசிக்­கும் துள­சேந்­தி­ர­பு­ரம் கிரா­மம் முன்­கூட்­டியே எழுந்து வெற்­றி­யைக் கொண்­டா­டத் தொடங்­கி­யது.

கிராம மக்­கள் பட்­டா­சு­களை வெடித்­த­னர்; இனிப்­பு­க­ளைப் பரி­மாறி மகிழ்ந்­த­னர். பெண்­கள் பல­ரும் தங்­க­ளது வாச­லில் திரு­வாட்டி கம­லா­வுக்கு வாழ்த்­துத் தெரி­விக்­கும் வண்­ணக் கோலங்­களை வரைந்­த­னர். ஒட்­டு­மொத்த கிரா­ம­மும் மகிழ்ச்­சி­யில் மூழ்கி இருந்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

துணை அதி­ப­ராக வெற்றி பெற்­ற­தும் உரை­யாற்ற வந்த திரு­வாட்டி கமலா ஹாரிஸ், பெண் வாக்­கு­ரி­மை­யைப் பிர­தி­ப­லிக்­கும் வித­மாக வெண்­ணிற உடை அணிந்­தி­ருந்­தார். அமெ­ரிக்­கா­வில் பெண்­கள் தேர்­த­லில் வாக்­க­ளிக்­கும் உரிமை பெற்ற சுமார் நூறாண்­டு­க­ளுக்­குப் பின்­ பெண் ஒரு­வர் அந்­நாட்­டின் உய­ரிய பத­வி­களில் ஒன்­றில் அமர இருப்­பது வர­லாற்று அபூர்­வம். "ஜன­நா­ய­கம் என்­பது ஒரு நிலை அல்ல; செயல்," என இதற்கு முன்­னர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜான் லுவிஸ் தெரி­வித்த கருத்தை திரு­வாட்டி கமலா தமது வெற்றி உரை­யில் நினை­வூட்­டி­னார். 19 வய­தில் தமது தாயார் இந்­தி­யா­வில் இருந்து அமெ­ரிக்கா வந்­த­போது இப்படி ஒரு சிறப்பான தருணம் நிகழும் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!