ராணுவ மருத்­து­வப் பயிற்­சிக் கழ­கத்­தின் முதல் பெண் தலை­வர்

சிங்­கப்­பூர் ராணுவ மருத்­து­வப் பயிற்­சிக் கழ­கத்­தின் முதல் பெண் தலை­வ­ராக 42 வயது ஷாலினி அரு­ளா­னந்­தம் நேற்று பொறுப்­பேற்­றார். இவர் 1998ஆம் ஆண்­டில்

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் உள்­ளூர் மருத்­துவ உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்ற முதல் பெண் மருத்­து­வ­ரா­வார்.

‌‌‌‌‌“உயர் பதவி வகிப்­ப­தில் பெண்­கள் ஆண்­க­ளுக்கு நிக­ரா­ன­வர்­கள். ஆண்­க­ளுக்­கான வாய்ப்­பு­க­ளைப் பெண்­களும் பெற முடி­யும். ஆனால் பெண்­கள் சுய­மா­கவே தங்­க­ளுக்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­கின்­ற­னர். சில நேரங்­களில் ஆண்

களைப் போல பணி­யாற்ற முடி­யுமா என்ற சந்­தே­கம் பெண்­க­ளுக்கு எழும். உயர் பதவி வகிக்­கும் சில பெண்­களில் ஒரு­வர் என்­கிற முறை­யில், தங்­க­ளு­டன் வேலை செய்­ப­வர்­களில் தாய்­மார்­கள் அதி­கம் இல்லை என்று உண­ரும்­போது சில சம­யங்­களில் நம்­மால் முடி­யுமா என்ற சந்­தே­கம் அவ்­வப்­போது

எட்­டிப்­பார்க்­கும். இதுவே என்­னைப் போன்ற பெண்­கள் எதிர்­நோக்­கும் மிகப் பெரிய சவால்,” என்று ஷாலினி தெரி­வித்­தார்.

தற்­போது மூத்த லெப்­டி­னண்ட் கர்­ன­லாக இருக்­கும் ‌‌‌‌ஷாலினி ஜூலை 1ஆம் தேதிகர்­ன­லா­கப் பதவி உயர்த்­தப்­படுகிறார்.

இவர் காது, மூக்கு, தொண்டை மருத்­துவ நிபு­ண­ரா­வார். அறுவை சிகிச்சை நிபு­ண­ரைத் திரு­ம­ணம் செய்த ஷாலி­னிக்கு மூன்று பிள்­ளை­கள் உள்­ள­னர்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் தலைமை மருத்­துவ அதி­கா­ரி­யா­க­வும் பொறுப்­பேற்­றார். கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லில் அவ­ச­ர­கா­லப் பணி­யா­ளர்களுக்­கான பாது­காப்பு செயல்முறை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் அம­லாக்­கு­வ­தில் ஷாலினி முக்­கிய பங்கு வகித்­தார்.

“கொரோ­னா­வால் ஏற்­பட்ட சவால்­கள், சிர­மங்­களை நான் நேர­டி­யாக அனு­ப­வித்­தேன். நான் மட்­டு­மில்லை என் ஆம்­பு­லன்ஸ் குழு­வி­ன­ரும் ஓர் ஆண்­டுக்கு மேலாக கடு­மை­யாக உழைத்து வரு­கி­றோம். எனது குழு­வி­ன­ரின் துணிச்­சல், மீள்­தி­றன் என்னை ஊக்­கப்­ப­டுத்­து­கிறது,” என்­றார் ஷாலினி.

ராணுவ மருத்­து­வப் பயிற்­சிக் கழ­கத்­தின் தள­பதி என்­கிற முறை­யில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் மருத்­துவ நிலை­யங்­களும் தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னை­களும் இவ­ரின் மேற்­பார்­வை­யின்­கீழ் வரும்.

சிங்­கப்­பூர் கடற்­படை, மத்­திய மனி­த­வ­ளத் தளம், வெளி­நாட்டு பொறுப்­பு­கள் என்று பல பிரி­வு­களில் இவர் அனு­ப­வம் பெற்­ற­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!