மக்கள் வருகை கூடியது

அதிகபட்சம் ஐவர் ஒரு குழுவாகச் சேர்ந்து உண்ண அனுமதி

அதி­க­பட்­சம் ஐவர் அடங்­கிய குழுக்­க­ளாக அமர்ந்து சாப்­பி­ட­லாம் என்ற புதிய தளர்வு நேற்று முதல் நடப்­பிற்கு வந்­தது உண­வ­கத் தொழில்­பு­ரி­வோர்க்­குப் புத்­து­யிர் அளிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

தேக்கா பகு­திக்கு நேற்று நண்­ப­கல் நேரத்­தில் சென்­றி­ருந்­த­போது, உண­வ­கங்­களில் மக்­கள் நட­மாட்­டம் கணி­ச­மா­கக் கூடி­யி­ருந்­தது தெரிந்­தது.

ஆனால், அதி­லும் ஒரு சிக்­கல். தேக்கா நிலை­யத்­தில் ஐவர் அமர்ந்­துண்­ணும் வகை­யில் சில மேசை­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தா­லும், பல மேசை­க­ளி­லும் இரு­வர் அல்­லது நால்­வர் மட்­டுமே அமர முடி­யும் வகை­யில் இருந்­தன.

“காலை­யில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவர் வந்­த­னர். இரண்டு மாத கால­மா­கக் காத்­தி­ருந்து நம் கடை­யில் சாப்­பிட ஆசைப்­பட்­ட­னர். ஆனால், அவர்­கள் ஐவ­ரும் ஒன்­றாக அமர்ந்து சாப்­பிட மேசை இல்­லா­த­தால் கிளம்­பி­விட்­ட­னர்,” என்­றார் தேக்கா நிலை­யத்­தில் கடந்த 39 ஆண்­டு­க­ளாக இயங்கி வரும் ‘ஜம் ஜம்’ உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு நூருல் அமீன், 46.

வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் வந்து சாப்­பிட்டதும் கிளம்­பா­மல் நீண்ட நேரத்­திற்கு உட்­கார்ந்­தி­ருப்­பது மற்­றொரு பிரச்­சினை என்­றார் தேக்கா நிலை­யம், சிவானி’ஸ் உண­வக ஊழி­யர் திரு­மதி மல்­லிகா சுப்­பி­ர­மணி­யம், 41.

“சிலர் கதை பேசிக்­கொண்­டும் திறன்­பே­சி­யில் படம் பாத்த்­த­ப­டி­யும் ஒரு மணி நேரத்­திற்­கும் மேலாக அமர்ந்து இருக்­கி­றார்­கள்,” என்­றார் திரு­மதி மல்­லிகா.

மற்ற உண­வ­கங்­கள் இது­போன்ற பிரச்­சி­னை­க­ள் இன்றிச் சுமு­க­மா­கச் செயல்­பட்­டன.

“எங்­க­ளது உண­வ­கத்­தில் குடும்­ப­மா­கப் பல­ரும் வந்து சாப்­பிடு­வது வழக்­கம். இந்­தப் புதிய தளர்­வு­க­ளால் வியா­பா­ரம் கூடும்,” என்று கோமள விலாஸ் உண­வ­கத்­தின் இயக்­கு­நர் திரு ராஜ­கு­மார் குண­சே­க­ரன், 35, சொன்னார்.

சேர்ந்து உண்­ணும் குழு­வி­ன­ரில் ஐவர்­வரை இடம்­பெ­ற­லாம் என்­ற­போ­தும் பயண எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி சுற்­றுப்­ப­ய­ணி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் போன்­றோர் வழக்­கம்­போல வந்­து­செல்ல முடி­யும்­வரை வர்த்தகங்கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வது கடி­னம் என்­றார் திரு ராஜ­கு­மார்.

உணவு விநி­யோ­கம், உணவு வாங்­கிச் செல்­வது போன்­றவை இருந்­தா­லும் கடைக்­கா­ரர்­கள் பல­ரும் நேரடி விற்­ப­னை­யைத்­தான் நம்பி உள்­ள­னர் என்­று லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் தலை­வ­ரும் பனானா லீஃப் அப்­போலா உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ரு­மான திரு சங்­க­ர­நாதன், 49, கூறினார்.

“பொது­வா­கவே, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டும்­போது மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரிப்­பது வழக்­கம்­தான். அது, உண­வ­கங்­க­ளுக்கு மட்­டு­மின்றி மற்ற பல வணி­கங்­களுக்­கும் கைகொ­டுக்­கும்,” என்­றார் திரு சங்­க­ர­நா­தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!