ஓமிக்ரான் தொற்று புதிய உச்சத்தை எட்டினாலும், நம்பிக்கையளிக்கும் புதிய தகவல்

ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி குறித்த நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பல நாடுகளில் ஓமிக்ரான் தொற்று புதிய உச்சத்தைத் தொட்டாலும், தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவோர் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதே அளவிற்கு ஏறவில்லை.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் புதியதொரு அத்தியாயத்தை இது குறிப்பதாக அறிவியல் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

“நாம் இப்போது முற்றிலும் வேறுபட்ட கட்டத்தில் இருக்கிறோம். கிருமி நம்மோடுதான் இருக்கப் போகிறது. ஆனால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு (ஓமிக்ரான்) திரிபு நோயெதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் கலிஃபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயெதிர்ப்பாற்றல் நிபுணர் பேராசிரியர் மோனிகா காந்தி.

ஒரு மாதத்திற்கு முன்புதான், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் திரிபு முதன்முறையாக கண்டறியப்பட்டது. எனவே, நிலவரம் மாறுவதற்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதாக வேறு சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

என்றாலும், முந்திய திரிபுகளைவிட ஓமிக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகக் கூறும் தரவு கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் வெளியிடப்பட்டது.

டெல்டா தொற்று அலை வீசிய காலத்துடன் ஒப்புநோக்க, தற்போது ஓமிக்ரான் அலையின்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்குக் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் 73 விழுக்காடு குறைவாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!