சிங்கப்பூர் மாதிடம் இருந்து $1.2 மி. தங்கக் கட்டிகள் பறிமுதல்

சிங்கப்பூர் மாது ஒருவரின் பயணப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளால் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 650,000 பிரிட்டிஷ் பவுண்ட் (S$1.2 மில்லியன்).

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வழியாக பயணம் செய்தார் அந்த மாது.

பதினைந்து தங்கக் கட்டிகளுடன் அங்கிருந்து வேறொரு விமானத்தில் சென்னைக்குப் புறப்படவிருந்த அவரை பிரிட்டிஷ் எல்லைப் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். கையில் எடுத்துச் செல்லக்கூடிய அவரது பயணப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், மேற்கு லண்டனில் நடைபெற்ற இரண்டு நாள் நீதிமன்ற விசாரணையின் முடிவில், தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்ய பிரிட்டனின் தேசிய குற்றவியல் தடுப்பு அமைப்புக்கு புதன்கிழமை (ஜனவரி 26) அனுமதி வழங்கப்பட்டது.

பெயரிடப்படாத அந்த மாது, தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படவோ அவர்மீது வழக்குத் தொடரப்படவோ இல்லை.

சிங்கப்பூரில் உள்ள நகைக்கடை வியாபாரி ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தத் தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள வேறொரு வியாபாரியிடம் தாம் ஒப்படைக்க இருந்ததாக தேசிய குற்றவியல் தடுப்பு அமைப்பிடம் அந்த மாது முன்னதாகக் கூறியிருந்தார்.

என்றாலும், சிங்கப்பூரிலிருந்து ஏன் லண்டன் வழியாக சென்னைக்குச் செல்லவிருந்தேன் என்பது குறித்து அவரால் விளக்கம் தர முடியவில்லை.

தங்கக் கட்டிகளுக்காக அந்த மாது வைத்திருந்த ரசீதுகள் போலியானவை என்றும் அந்த சென்னை நகைக்கடை வியாபாரியின் பெயரில் எவரும் இல்லை என்றும் கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தத் தங்கக் கட்டிகள், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உயிர்ப்புடன் இருக்கும் குற்றவியல் கும்பலுக்குச் சொந்தமானவை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் தேசிய குற்றவியல் தடுப்பு அமைப்பின் தளபதி ஆன்டி நோயஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வந்திறங்கியவுடன் சுங்கத்துறை அதிகாரிகளின் கவனத்தில் இருந்து தப்புவதற்காக, தங்கக் கட்டிகளை லண்டன் வழியாகக் கொண்டு சென்றிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!