உலகில் போடப்பட்டுள்ள 10 பில்லியன் தடுப்பூசிகள்

உலகம் முழுவதும் 10 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் தரவுகளில் நமது உலகம் (Our World in Data) எனும் திட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் அதைத் தெரிவித்தன.

அதாவது இவற்றைக் கொண்டு உலகில் உள்ள 7.9 பில்லியன் மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம்.

அரசாங்கங்களும் மருந்து நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் உலகமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் சமமாகச் சென்று சேரவில்லை.

உலகின் பணக்கார நாடுகளில் உள்ள 77 விழுக்காட்டு மக்கள் குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் வசதி குறைந்த நாடுகளில் பத்து விழுக்காட்டு மக்கள் கூட ஒரு தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

வட அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நாடுகள் தங்கள் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக விரைந்து செயல்பட்டு வருகின்றன.

சில நாடுகள் நான்காவது தடுப்பூசியையும் தொடங்கியுள்ளன.

அதே வேளையில் ஆப்ரிக்காவிலும் சில ஆசிய நாடுகளிலும் முதல் பலர் முதல் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.

அதே வேளையில் எல்லா தடுப்பூசிகளும் ஒரே மாதிரி இல்லை.

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு, ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளைவிட குறைவான செயல்திறன் உள்ளன.

அத்துடன், பெரும்பாலான தடுப்பூசிகள் கடும் நோயிலிருந்து காத்தபோதும் ஓமிக்ரான் கிருமித்தொற்றுக்கு எதிராக அவை பெரிய அளவில் பாதுகாக்கவில்லை.

தடுப்பூசிகளில் உள்ள ஏற்றதாழ்வினால், கிருமி தொடர்ந்து பரவும் சூழலும் புதுபுதுக் கிருமி வகைகளும் ஏற்படும் சாத்தியமும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!