உல‌க‌ம்

கெய்ரோ: கிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டாம் ரேம்சிஸ் மன்னரின் சிலையை எகிப்து மீட்டுள்ளது. அந்த சிலை 3,400 ஆண்டு பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.
ஷா ஆலம்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியாவுக்கான தனது சீர்திருத்தங்களை சமரசம் செய்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.