இர்ஷாத் முஹம்மது

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை சிங்கப்பூரர்கள் சமாளிக்க கூடுதலாக $1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவின ஆதரவுத் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கவிருக்கிறது.
அனைவருக்கும் பலனளிக்கும் பலதரப்பு உறவுகொண்ட அமைப்பு முறை இருப்பதே சாலச் சிறந்தது என்றாலும் பெரிய நாடுகளுக்கு மத்தியிலான பூசல்களால் அத்தகைய ஒத்துழைப்பு பாதிக்கப்படுகிறது. ஆக, இணைந்து பணியாற்றக்கூடிய நாடுகளுடன் நட்புறவை விரிவாக்கி இருநாடுகளுக்கும் பலன் தரும் அம்சங்களில் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளாக வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வித்திட்ட பலதரப்பு அமைப்புகளின் சட்டப்படியான அதிகாரம், அவற்றின் விதிமுறைகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதை முக்கிய பணியாக மேற்கொள்ளவேண்டும் என்று ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் சில உறுப்பினர்களைக் கொண்டு உலக உயிர் எரிபொருள் கூட்டணி சனிக்கிழமை அன்று தொடக்கம் கண்டது.
புதுடெல்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்காட் மைதானத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனியார், அரசாங்க நிதிகளை இணைக்கும் புதிய நிதி அமைப்பு முறை தேவை என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை உத்திபூர்வ பங்காளித்துவமாக உயர்த்தும் கூட்டறிக்கையை பிரதமர் லீ சியன் லூங்கும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் வெளியிட்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்த கூட்டறிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின் ஒரு சந்திப்பில் அறிவித்தார்.
புதுடெல்லி: உலக நாடுகள், அனைத்துலக அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி20 மாநாடு அதிகாரபூர்வமாக சனிக்கிழமை காலை தொடங்கியது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ சியன் லூங் பயணம் மேற்கொள்கிறார்.