'ஃபைஸர்-பயோ­என்­டெக் தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்­டுக்­கொண்­டாலே கிரு­மிக்கு எதி­ரான பாது­காப்­பில் 3ல் இரண்டு பங்கு கிடைத்­து­வி­டும்'

படம்: ஏஎஃப்பி

ஃபைஸர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மருந்தை ஒரு­முறை போட்­டுக்­கொண்­டாலே கொரோனா கிரு­மிக்கு எதி­ரான பாது­காப்­பில் மூன்­றில் இரு­ம­டங்கு கிடைத்­து­வி­டும் என பிரிட்­ட­னில் வெளி­யாகி உள்ள தரவு ஒன்று தெரி­விக்­கிறது. அதனை பிரிட்­டன் அர­சாங்­கம் சரி­பார்த்­துள்­ளது.

கிருமி தொற்­றி­ய­தற்­கான அறி­கு­றி­யு­டன் இருக்­கும் நோயா­ளி­களில் இளை­ய­வர்­கள் ஒருமுறை ஃபைஸர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­போது அவர்­க­ளுக்கு 65 விழுக்­காடு பாது­காப்­பும் 80 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு 64 விழுக்­காடு பாது­காப்பும் கிடைக்­கிறது என்று இந்த விவ­ரங்­களை அறிந்த ஒரு­வர் புளூம்­பெர்க் செய்­தி­யி­டம் கூறி­னார். இரண்­டாம் முறை அந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­போது வய­துக்­கேற்ப 79 விழுக்­காடு முதல் 84 விழுக்­காடு வரை பாது­காப்பு கிடைத்­து­வி­டு­கிறது என்­றும் அந்­தத் தரவு குறிப்­பி­டு­கிறது.

தடுப்­பூசி மருந்தின் செயல்­தி­றன் தொடர்­பான இந்­தத் தரவு முதன்­மு­த­லில் ‘த சன்’ செய்­தித்­தா­ளில் வெளி­யி­டப்­பட்­டது. பிரிட்­டிஷ் அர­சாங்­கத்­தின் தடுப்­பூ­சித் திட்­டத்­தில் கண்­ட­றிந்­த­வற்றை தரவு உள்­ள­டக்கி உள்­ளது.

ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­யி­லும் கிட்­டத்­தட்ட இதே­மா­தி­ரி­யான பாது­காப்பு கிடைப்­ப­தாக அந்­தச் செய்­தித்­தாள் தெரி­வித்­தது.

தர­வில் தெரி­விக்­கப்­பட்ட ஆற்­றல் விகி­தம் ஃபைஸரின் மருந்­தக சோதனை முறை­யில் காணப்­பட்­ட­தைக் காட்­டி­லும் குறைவு என்­ற­போ­தி­லும் இந்­தத் தரவு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு மக்­களை ஊக்­கப்­ப­டுத்த உத­வும் என போரிஸ் ஜான்­ச­னின் அர­சாங்­கம் நம்­பு­கிறது. பல மாதங்­க­ளாக முடக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யலை மீண்­டும் திறந்­து­விட தடுப்­பூ­சித் திட்­டத்­தின் வெற்றி கைகொ­டுக்­கும் என்­பது அதன் கணிப்பு.

ெசவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி பிரிட்­ட­னில் 12.6 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்டவர்கள் தடுப்­பூ­சி­யின் முதல் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார். ஃபைஸர் அல்­லது ஆக்ஸ்­ஃபர்-ஆஸ்ட்­ரா­ஸெ­னகா ஆகி­ய­வற்­றில் ஏதே­னும் ஒன்று அவர்­க­ளுக்­குச் செலுத்­தப்­பட்டு உள்­ளது. குறிப்­பாக, 80 வய­துக்கு மேற்­பட்­டோ­ரில் 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக ஆக அண்­மைய தரவு கூறு­கிறது.

முடக்­க­நிலை கார­ண­மாக பிரிட்­டன் 300 ஆண்­டு­களில் காணாத ஆக மோச­மான பொரு­ளி­யல் சரி­வைச் சந்­தித்­துள்­ளது.

அதனை மீட்ெடக்கும் முயற்சி களில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டன் படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங் களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி மீது பிரிட்டனுக்கு நம்பிக்கை இருந்தபோதிலும் புதிய வகைக் கிருமியை அது முறியடிக்கு மா என்ற ஐயத்தைப் போக்கும் வகையில் திரு ஜான்சன் இவ்வாரம் விளக்கம் அளித்தார்.

ஃபைசர்-பயோஎன்டெக்
தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!