கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்டவுடன் பேரங்காடிகளுக்குப் படையெடுத்த மக்கள்

பொங்கோல் வட்டாரத்தில் உள்ள வாட்டர்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் அமைந்துள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குள் நுழைய இன்று (மே 14) வரிசையில் காத்திருந்த மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நாளை மறுதினம் (மே 16) முதல் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவிருப்பதாக கொவிட்-19 பணிக்குழு அறிவித்தது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் மளிகைப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகளுக்கு இன்று பிற்பகல் படை எடுத்தனர். அக்கடைகளில் நீண்டவரிசை காணப்பட்டது.

இந்நிலையில, சிங்கப்பூரில் பேரங்காடிகள் உள்ளிட்ட எல்லா சில்லறை வர்த்தகக் கடைகளும் மே 16 முதல் ஜூன் 13 வரை திறந்து இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் இன்று மக்களுக்கு உறுதி தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவுக்கு இருக்கின்றன. பொருட்கள் வருவதற்கான வழியும் அடை படாமல் உள்ளன என்று ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர்
கொவிட்-19
கட்டுப்பாடுகள்
பேரங்காடி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!