ஊழியருக்கு கிருமித்தொற்று; உட்லண்ட்ஸ் ஃபேர்பிரைஸ் மூடப்பட்டது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் அவென்யூ ஒன்றில் உள்ள சாம்பியன்ஸ் கோர்ட் அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பணியாற்றும் ஓர் ஊழியருக்குக் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 கிருமிப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஊழியருக்கு இன்று (மே 18) கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து என்டியுசி ஃபேர்பிரைஸ் அது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. புளோக் 570பியில் அமைந்துள்ள அந்தக் கிளை வரும் வியாழக்கிழமை வரை சுத்தம் செய்யும் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட கிளையில் பணியாற்றுவோர் அனைவரும் விடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொவிட்-19 தொற்றிய ஊழியருக்கு ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் கூறியது.

ஃபேர்பிரைஸ்
கிருமித்தொற்று
என்டியுசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!