சிங்கப்பூர், செங்காங் பொது மருத்துவமனைகளில் விபத்து, அவசரகாலப் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வருகையைப் பதிவுசெய்யும் பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் செங்காங் பொது மருத்துவமனையும், தங்களது விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவுகளுக்கு மருத்துவ உதவி நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

தற்போதைய சூழலில் தனது வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக செங்காங் பொது மருத்துவமனை இன்று (மே 1) வெளியிட்ட அதன் ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

கவலைக்கிடமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இரு மருத்துவமனைகளும் தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளன. மற்ற நோயாளிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவை கூறின.

மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே உடனிருக்கலாம்.

அவசர நிலையில் இல்லாதோர் பொது மருத்துவரையோ பலதுறை மருந்தகத்தையோ நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செங்காங் பொது மருத்துவமனையில் ஏறத்தாழ 1,000 படுக்கைகளும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஏறக்குறைய 1,700 படுக்கைகளும் உள்ளன.

டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 குழுமம் உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு நான்கு வார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிங்கப்பூர், செங்காங் பொது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கும் டான் டோக் செங் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.

டான் டோக் செங்
மருத்துவமனை
சிங்கப்பூர்
செங்காங்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!