சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு 3.4 ஆக சரிந்தது

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவிழந்து மே 24, 3.4102 ஆக சரிந்தது.

திங்கட்கிழமை 3.38லிருந்து செவ்வாய் 3.39 ஆக குறைந்தது என்று ப்ளூம்பெர்க் தரவு காட்டுகிறது. இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம் 3.3764 ஆக இருந்தது.

அண்மைய வீழ்ச்சியுடன், இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து ரிங்கிட்டின் மதிப்பு 4.15 விழுக்காடு சரிந்துள்ளது.

மூலப்பொருள்களின் விலை மேலும் குறைந்தால் சீனாவின் பொருளியல் வளர்ச்சி குறைந்து, அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்தால், ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு மேலும் குறைந்து 3.45 ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மேபாங்க் தலைமை அந்நிய செலாவணி நிபுணர் சக்தியாண்டி சுபாத் கூறினார். 

“உலகளாவிய பொருளியல் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய், செம்பனை எண்ணெய் மூலப் பொருள்களின் விலைச்சரிவு, அண்மைய காலங்களில் ரிங்கிட்டைப் பாதித்திருக்கலாம்,” என்று அவர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு செலாவணி விகிதம் வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கும். அத்துடன், ரிங்கிட்டின் தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை மேற்கொள்ளக்கூடும் என்பதால், இது மலேசியா எதிர்கொள்ளும் திறனாளர் பிரச்சினையை அதிகரிக்கக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!