முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை

சிங்கப்பூருக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு நீக்கப்படும். இதோடு தனிமைப்படுத்தல் முடிவில் அவர்கள் பிசிஅர் பரிசோதனை செய்ய தேவையில்லை. இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 29லிருந்து நடப்புக்கு வரும். 

இதோடு, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குறுகிய, நீண்ட கால அனுமதி சீட்டு உள்ளவர்கள் சிங்கப்பூருக்கு நுழைவதற்கு முன் வருகை அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. 

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு தொற்று இல்லாததை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். 

இதோடு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குறுகியகால பயணிகள் சிங்கப்பூரில் தாங்கள் தங்கும் காலகட்டத்துக்கு தொடர்ந்து கொவிட்-19 காப்புறுதி வாங்கவேண்டும். 

இத்துடன், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் தங்கள் பயணத்தின்போது கிருமித் தொற்று ஏற்பட்டால் தத்தம் நாடுகளின் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தொற்று இருந்தால், சிங்கப்பூருக்கு வருவதை அவர்கள் ஒத்திவைக்கவேண்டும். தொற்று இல்லாதது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய வேண்டும். 

கடல், ஆகாய வழி சிங்கப்பூருக்கு வரும் அனைவரும் தங்கள் மின்னணுச் சுகாதார உறுதிமொழியை எஸ்ஜி வருகை அட்டை மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!