ஜல்லிக்கட்டு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய திடலுடன் கூடிய அரங்கிற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரை: நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 12,176 காளைகள் களமிறக்கப்படவுள்ளன. அவற்றை அடக்குவதற்கு 4,514 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாகக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் ‘ராமு பையா’ என்ற தனது காளையைக் களமிறக்கத் தயாராகி வருகிறார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. ஜல்லிக்கட்டுப் போட்டியில் தற்போது பெண்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேச்சு வார்த்தையை முழுமையாகக் காணொளிப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.