விழிப்புணர்வு

சிங்கப்பூர் தேசிய பக்கவாத நலச்சங்கம் ஏற்பாடு செய்யும் வருடாந்தரப் பெருநடை, சனிக்கிழமை (அக். 21) நடைபெறவிருக்கிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழு வதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ஒத்திகை சென்னை அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையில் நடைபெற்றது.
சைக்கிளிலேயே தனி ஒருவராக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்தின் நராத்திவாட் மாகாணத்திற்குச் சென்று சைக்கிளிலேயே இங்கு திரும்பினார் கணேசன் சோமா, 33. அரியவகை நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ‘இக்கானமிஸ்ட்’ பத்திரிகையின் பணித்திட்ட மேலாளரான அவரது இந்தப் பயணத்தின் நோக்கம். அவர் சைக்கிளில் மொத்தம் 1,988 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை அவரது பயணம் நீடித்தது.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சிங்கப்பூர் தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்திற்குப் பங்காற்றிய தாதியரின் வளமான வரலாற்றை நினைவுகூரும் வகையில் அமைகிறது இந்த நாள்.