புயல்

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த புயல் காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் தரைமட்டமாகி, மின் கம்பங்கள் சரிந்து, ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல், நிலச்சரிவு ஆகியவற்றால், பிக் சுர் வட்டாரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை 1ன் ஒரு பகுதி மார்ச் 30ஆம் தேதி இடிந்து சேதமடைந்தது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் 110,000 வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மணிலா: ஜெலாவத் புயல் தாக்கியதில் பிலிப்பீன்ஸில் ஒருவரைக் காணவில்லை, பல்லாயிரம் பேர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு ஓடினர். தென்பகுதி பெருந்தீவான மிண்டானோவை புயல் சுழற்றித் தாக்கியதில் பெருவெள்ளம் ஏற்பட்டதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பியூனஸ் அய்ரஸ்: வார இறுதியில் அர்ஜெண்டினாவையும் அண்டை நாடான உருகுவேயையும் தாக்கிய கடுமையான புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 க்கு உயர்ந்தது.