நாணயம்

நாணய சேகரிப்பாளரான 72 வயது திரு ஆண்டியப்பன், டிபிஎஸ் வங்கியின் மூன்று கிளைகளுக்குச் சென்ற பிறகுதான் எட்டு $10 லீ குவான் யூ நூற்றாண்டு (எல்கேஒய்100) நினைவு நாணயங்களைப் பெற முடிந்தது.
டிசம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் 142 வங்கிக் கிளைகளுக்குச் சென்று லீ குவான் யூ நினைவு சிறப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
நாணயங்களைச் சேகரிப்போர், 2024ஆம் ஆண்டு பிறக்கவுள்ள புதிய கடல்நாக ஆண்டுக்காக சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிடும் சிறப்பு நாணயங்களை வாங்க விருப்பம் தெரிவிக்கலாம்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் பலர் விடுமுறைக்கும் மலேசியாவில் வீட்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்கும் திட்டமிடுகின்றனர். மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதே அதற்குக் காரணம்.
மலேசிய ரிங்கிட் மதிப்பு 25 ஆண்டுகளில் காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. 1997-1998 ஆசிய நிதி நெருக்கடியை அடுத்து பதிவான மிகப் பெரிய சரிவு இது.