சான் சுன் சிங்

புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அல்லது உணர்ச்சிபூர்வமான தலைப்புகள் நற்குணமும் குடியியல் கல்வியும் (சிசிஇ) பாடங்களில் சேர்க்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாட்டின் கல்விமுறையில் 2024ஆம் ஆண்டுக்கான தமது முன்னுரிமைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எடுத்துரைத்தார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.
பெய்ஜிங்: உலகப் பொருளியல் நிலவரத்தின் நிச்சயமற்ற நிலையிலும் சிங்கப்பூரும் சீனாவும் இன்னும் அதிகமானவற்றை உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட விநியோகத் தொடரை இணைந்து உருவாக்க இயலும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
பொதுமக்கள் கூர்ந்து கவனிப்பதால் ஏற்படக்கூடிய நெருக்குதல்கள் இருந்தாலும் நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும் என்று பொதுச் சேவையைச் சேர்ந்த 153,000 ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறியுள்ளார்.