பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கப்பல் பயணங்கள் தொடரும்

திட்டமிட்டபடி சிங்கப்பூரின் பாது­காப்­பான சோதனை சொ­குசுக் கப்­பல் பய­ணங்­கள் தொட­ரும் என்று தெரி­வித்த சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம், சொகு­சுக் கப்­ப­லில் உள்ள பய­ணி­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால், அதற்­கான உட­னடி பதில் நட­வ­டிக்­கை­கள் விரை­வா­க­வும் பய­னுள்­ள­தா­க­வும் இருக்­கும் என்­றும் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

‘ராயல் கரீ­பி­யன் இன்­டர்­நே­ஷ­னல்’ நிறு­வ­னத்­தின் ‘குவான்­டம் ஆஃப் த சீஸ்’ சொ­குசுக் கப்­ப­லில் இருந்த முதிய பயணி ஒரு­வ­ருக்கு கிரு­மித்தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­வு­டன் அவர் உட­ன­டி ­யா­கக் கப்­ப­லில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

நான்கு நாள் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருந்த அந்­தக் கப்­பல் மூன்­றாம் நாளில் சிங்­கப்­பூர் திரும்ப உத்­த­ர­வி­டப்­பட்­டது. அதன் தொடர்­பில் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று கருத்­து­ரைத்­தது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் திரும்­பி­ய­வு­டன் உட­ன­டி­யாக மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு, தொடர்ந்து மூன்று கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தப்­பட்ட அந்த 83 வயது முதி­ய­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்­தப்­ பட்­டது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கப்­ப­லில் ஏற்­பட்ட தொற்று சம்­ப­வம் குறித்து நேற்று வெளி­யிட்ட பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் அறிக்­கை­யில், “பாது­காப்­புக்கு நாங்­கள் முன்­னு­ரிமை அளிக்­கி­றோம். நேற்­றைய சம்­ப­வம், எதிர்­கால கப்­பல் பய­ணங்­க­ளுக்கு மிக­வும் பய­னுள்ள படிப்­பி­னை­யைத் தந்­துள்­ளது. ட்ரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கரு­வி­யின் பயன்­பாட்­டால், பய­ணி­க­ளின் தட­ம­றி­தலை எளி­தில் மேற்­கொள்ள முடிந்­தது அதன் முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

“இது­போன்று எதிர்­கா­லத்­தில் மற்­றொரு கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வம் கப்­ப­லில் நிகழ்ந்­தால், பதில் நட­வ­டிக்கை விரை­வா­க­வும் பய­னுள்­ள­தா­க­வும் அமை­யும் என்ற நம்­பிக்­கையை அனை­வ­ருக்­கும் வழங்­கி­யுள்­ளது.

“குறிப்­பாக, ‘ராயல் கரீ­பி­யன் இன்­டர்­நே­ஷ­னல்’ கப்­பல் நிறு­வ­னத்­துக்­கும் முனை­யத்­தின் நடத்­து­நரான சேட்ஸ்-குரு­வர்ஸ் நிறு­வ­னத்­தின் துரி­த­மான அவ­ச­ர­கால நட­வ­டிக்­கைக்­கும் எங்­கள் பாராட்­டு­களைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்,” என்­றார் சிங்­கப்­பூர் பய­ணத் து­றைக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி திரு கீத் டான்.

அத்­து­டன் நேற்று முன்­தி­னம் ‘குவான்­டம் ஆஃப் த சீஸ்’ சொ­குசுக் கப்­ப­லின் பய­ணி­கள் கப்­ப­லி­லி­ருந்து இறங்­கு­வ­தற்கு வழி­வி­டும் வகை­யில் ஜென்­டிங் குருஸ் லைன்ஸ் கப்­பல் நிறு­வ­னம் தனது கப்­ப­லின் பய­ணி­களை அதற்கு முன்­பாக விரை­வில் இறங்க வைத்து உத­வி­யதற்­கும் திரு டான் நன்றி தெரி­வித்­தார்.

இதன் மூலம் இரு கப்­பல்­க­ளின் பய­ணி­கள் முனை­யத்­தில் ஒரு­வ­ரோடு ஒரு­வர் சந்­தித்­துக்­கொள்­வது தவிர்க்­கப்­பட்­டது. ‘குவான்­டம் ஆஃப் த சீஸ்’ சொ­குசுக் கப்­ப­லில் பயணம் செய்த 1,600க்கு மேற்பட்ட பய­ணி­கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

“அந்­தக் கப்­பல்­க­ளின் நிபு­ணத்­து­வ செயல்­பாடு, நமது சோதனை சொ­குசுக் கப்­பல் பய­ணங்­கள் தொடர்ந்து பாது­காப்­பு­டன் நடை­பெ­று­வ­தற்­கான நம்­பிக்­கையை நமக்கு அளித்­துள்­ளது,” என்­றும் திரு டான் சொன்­னார்.

சுகா­தார அமைச்சு தனது அறிக்­கை­யில், ‘குவான்­டம் ஆஃப் த சீஸ்’ கொசு­குக் கப்­ப­லில் உள்ள சோதனை முறை­யின் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளது.

முதியவருக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப் பட்டதால், தனது பயணங்களைத் தொடரக்கூடிய செய்தியை வரவேற்ப தாகக் கூறிய ‘ராயல் கரீ­பி­யன் இன்­டர்­நே­ஷ­னல்’ நிறு­வ­னம் அந்த முதியவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!