பட்ஜெட் 2021: கொவிட்-19 பாதிப்புகளைச் சமாளிக்க 2வது ஆண்டாக சேமிப்பு நிதியைப் பெற உத்தேசம்; $11 பி. மும்முனை உதவித் திட்டம்

கொவிட்-19 காரணமாக நிச்சயமில்லாத நிலவரம் தொடரும் நிலையில், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் inRu (பிப்ரவரி 16) நாடாளுமன்றத்தில் சமநிலையான ஒரு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

மொத்தம் $107 பில்லியன் மதிப்புள்ள அந்தத் திட்டம் இன்னமும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் துறைகளுக்கு உடனடியாக உதவிகளை வழங்கவும் அதேநேரத்தில் சிங்கப்பூரின் எதிர்காலத்தில் நீண்டகாலப் போக்கில் முதலீடு செய்யவும் வழிவகுக்கிறது.

புதிய திட்டத்தின் முக்கிய அங்கமாக $11 பில்லியன் கொவிட்-19 மீட்சித் தொகுப்புத் திட்டம் இந்த ஆண்டில் நடப்புக்கு வரும் என்று நிதி அமைச்சருமான திரு ஹெங் அறிவித்தார்.

அது ஒருபுறம் இருக்க, 2021ல் 200,000 உள்ளூர் மக்களை வேலையில் சேர்க்க ஆதரவாக மேலும் $5.4 பில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கான மும்முனை அணுகுமுறையின் ஓர் அங்கமாக ஒதுக்கப்பட்டு உள்ள அந்தத் தொகையில் $4.8 பில்லியன் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க செலவிடப்படும்.

இதில் ஒவ்வொருவருக்கும் இலவச தடுப்பூசியும் உள்ளடங்கும். தேசிய தடுப்பூசித் திட்டத்துக்கும் கிருமி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான மருந்துகளுக்கும் $1 பில்லியன் செலவாகும்.

ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்க $5 பில்லியன் ஒதுக்கப்படும். இதில் $2.9 பில்லியன் வேலை ஆதரவுத் திட்ட நீட்டிப்புக்குச் செலவாகும்.

விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மூன்றாவது தவணையாக $1.2 பில்லியன் ஒதுக்கப்படும்.

கலைகள், கலாசாரம், விளையாட்டு, கடல்துறைக்கு $100 மில்லியன் செலவிடப்படும். இந்த ஆண்டு கொவிட்-19 உதவித்திட்டமாகச் செலவிடப்படும் $11 பில்லியனில் 2020 நிதியாண்டில் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படும் $9.3 பில்லியனும் இருப்பில் இருந்து இந்த ஆண்டில் எடுக்கப்படும் $1.7 பில்லியனும் அடங்கும்.

பொருளியல் சூழ்நிலை மோசமடைந்தால், தேவை ஏற்பட்டால் சேமிப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசாங்கம் அதிபரை கேட்டுக்கொள்ளும் என்றும் திரு ஹெங் தெரிவித்தார். சேமிப்பில் இருந்து தொகையை எடுத்துக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதை தான்

ஏற்றுக்கொள்வதாக அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று ஃபேஸ்புக்கில் கூறினார். நிதி அமைச்சர் தாக்கல் செய்த $11 பில்லியன் ஒட்டுமொத்த பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டம், குடும்பங்களுக்கான பற்றுச்சீட்டுகள் முதல் ஜிஎஸ்டி வரி அறி விப்பு உள்ளிட்ட முக்கியமான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் பெட்ரோல் விலை இன்று முதல் உயர்ந்தது. அந்த விலை உயர்வைப் பற்றி நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான ஹெங் சுவீ கியட் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தார்.

அதன்படி முதல்ரக பெட்ரோல் விலை, அதில் கலந்துள்ள கரிம அளவைப் பொறுத்து 1 லிட்டருக்கு 15 காசு முதல் 79 காசு வரை உயர்ந்தது. நடுத்தர ரக பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 10 காசு முதல் 66 காசு வரை கூடியது.

சிங்கப்பூரின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!