தடுப்பூசி: மூத்தோரை பரிந்துரைப்போருக்கு $30 பற்றுச்சீட்டு

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியோரை அனுப்பி வைப்போருக்கு ஆகஸ்ட் 13 முதல் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை சுகாதார மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து $30 மதிப்புடைய மின்பற்றுச்சீட்டு கிடைக்கும்.

அவர்கள் 60க்கும் மேற்பட்ட வயதுடைய எத்தனை பேரை தடுப்பூசி நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் இந்தத் தொகை அதிகமாகக் கிடைக்கும் என்று இந்தக் கழகம் தெரிவித்து உள்ளது.

இந்தக் கழகத்தின் வெகுமதி செயல் திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் ஃபேர்பிரைஸ், கெத்தே சினிமாஸ், சாக்கே சுஷி, லிஹோ டீ உள்ளிட்ட நிறுவனங்களில் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பலன் அடையலாம்.

இதற்குத் தகுதி பெற முதலில் ஒருவர் இணையம் மூலம் இதில் பதியவேண்டும். இதைச் செய்தால் இந்தக் கழகத்திடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வரும்.

பிறகு அவர்கள் முதியவர்களைத் தடுப்பூசிக்குப் பரிந்துரைக்கலாம். இந்தக் கழகத்தின் ஊழியர்கள் பணியிலிருக்கும் தடுப்பூசி நிலையத்திற்கு முதியவர்களுடன் அவர் செல்ல வேண்டும்.

அங்கு கழகத்தின் குறுஞ்செய்தியையும் தனது அடையாள அட்டையையும் அவர் காட்ட வேண்டும். முதியவருக்கு இரண்டு தடுப்பூசியும் போடப்பட்ட பிறகு அவரின் கணக்கில் (Healthy 365) தொகை வரவுவைக்கப்படும்.

இத்திட்டத்தில் 17க்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், எம்பிளாய்மெண்ட், ஒர்க் பர்மிட் ஊழியர்கள் கலந்துகொள்ளலாம். முதியோரிடையே தடுப்பூசி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வரும் நிலையில், இந்தச் செயல்திட்டம் நடப்புக்கு வருகிறது.

இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 177,000 ஆக இருக்கிறது என்று ஜூலை 31ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!