உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக எஸ்ஐஏ

எஸ்ஐஏ நிறுவனம் உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபார்ச்யூன் சஞ்சிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகம் போற்றப்பட்ட 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுகிறது.

அந்தப் பட்டியலில் விமான நிறுவனங்களில் எஸ்ஐஏ முதல் இடம் பிடித்தது.

அத்துடன், தலைசிறந்த ஆசிய நிறுவனமாகவும் அது தேர்வு செய்யப்பட்டது.

புகழ்பெற்ற வர்த்தக சஞ்சிகையான ஃபார்ச்யூன் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த சுமார் 3,740 நிர்வாகிகள், நிறுவன இயக்குநர்கள், பகுத்தாய்வாளர்கள் ஆகியோரிடம் கருத்தாய்வை நடத்தியது.

தங்கள் துறையில் அவர்கள் மிகவும் மெச்சிப் போற்றும் நிறுவனம் எது என்று கேட்கப்பட்டு பட்டியல் உருவாக்கப்படுகிறது.

பட்டியலில் கடந்த முறை 34வது இடத்தில் வந்த எஸ்ஐஏ நிறுவனம், இந்த ஆண்டு 32வது இடத்தைப் பிடித்தது.

எஸ்ஐஏ கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம்பெற்று வந்துள்ளது.

முதல் மூன்று இடங்களில் ஆப்பிள், அமேசன், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் முறையே வந்தன.

ஃபைசர் நிறுவனம் நான்காவது இடத்தைப் பிடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!