தேக்கா மார்க்கெட் உள்ளிட்ட உணவங்காடி, பேரங்காடி, கடைத்தொகுதிகளில் எச்சரிக்கையுடன் கூடிய கொவிட்-19 கட்டுப்பாடு தளர்வு

எளி­மை­யாக சீர­மைக்க கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தடுப்­புக் கட்­டுப்­பா­டு­கள் நேற்று முதல் நடப்­புக்கு வந்­தன. கடைத்­தொ­கு­தி­கள், பேரங்­கா­டி­களில் ஒரு மீட்­டர் தூர இடை­வெளி கட்­டா­ய­மில்லை.

எனி­னும் சில பேரங்­கா­டி­களும் கடை­களும் எச்­ச­ரிக்கை உணர்­வு­டன் கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்­கின்­றன.

என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­கள் உள்­ளிட்ட சில இடங்­களில் தூர இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­ப­தற்­கான கட்­டங்­கள் இன்­னும் உள்­ளன.

“பாது­காப்­பான சமூக நடை­மு­றை­களை ஊக்­கு­விக்க, தற்­போ­துள்ள பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை ஃபேர்பி­ரைஸ் தொடர்­கிறது,” என்று ஃபேர்பி­ரை­சின் செய்­தித் தொடர்­பா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

மாறிக்­கொண்டே இருக்­கும் நிலை­மையை ஃபேர்பி­ரைஸ் கண்­கா­ணித்து வரும் என்­றும் அவர் சொன்­னார்.

மளி­கைப் பொருள்­கள் வாங்­கு­தல், வழி­பா­டு­களில் கலந்­து­கொள்­வது, பூங்­காக்­க­ளுக்­குச் செல்­வது போன்ற முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளின் பாது­காப்­பான தூர இடை­வெளி ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறது. ஆனால் கட்­டா­ய­மில்லை.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் உள்ள கூரை­யுள்ள பகு­தி­கள், போன்ற பூங்­காக்­களில் உள்ள பொது இடங்­களில் உள்ள பாது­காப்பு இடை­வெ­ளிக் குறி­யீ­டு­கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பீஷான், காத்­தோங்­கிலுள்ள சில பொது இடங்­க­ளி­லும் பாது காப்பு தூர இடை­வெளி நடப்­பில் உள்ளது.

தேசிய பூங்­காக் கழ­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் முகா­மி­டும் தளங்­கள், இறைச்சி வாட்­டும் (பார்­பிகியூ) இடங்­களும் தேவை­யைப் பொறுத்து வெள்­ளிக்­கி­ழமை முதல் திறக்­கப்­படும் என்று பூங்­காக் கழ­கத்­தின் பூங்­காத் துறை குழு இயக்­கு­ந­ரான திரு சியா செங் ஜியாங் கூறி­னார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் பல உண­வங்­கா­டி­க­ளி­லும் நேற்று முதல் ஒரு மீட்­டர் தூர இடை­வெ­ளிக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்­டுள்­ளன.

தேக்கா சந்தை அரு­கே­யுள்ள கமலா உண­வ­கத்­தி­லும் பஃப்ளோ சாலை­யி­லுள்ள மது­ராஸ் விலாஸ் உண­வ­கத்­தி­லும் மேசை­க­ளி­லும் இருக்­கை­க­ளி­லும் பாது­காப்பு இடை­வெளி அடை­யாள ஒட்­டுத் தாள்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன.

தேக்கா நிலைய உண­வங்­கா­டிக் கடை­களில் உள்ள இருக்­கை­களும் மேசை­களும் பிளாஸ்­டிக் தடுப்­பு­க­ளால் மூடப்­பட்­டி­ருக்­கின்­றன. எனி­னும், பாது­காப்பு இடை­வெளி அடை­யா­ளத்­துக்­காக ஒட்­டப்­பட்ட ஒட்­டுத்­தாள்­க­ளின் மேலேயே மக்­கள் அமர்ந்­தி­ருந்­த­னர்.

தேக்கா நிலை­யம், லிட்­டில் இந்­தியா ஆர்க்­கெட் ஆகிய இடங்­களில் பிளாஸ்­டிக் தடுப்­பு­கள் இன்­னும் உள்­ளன.

‘சேஃப்­எண்­ட்ரி’ பதி­வும் உள்­ளது.

வியா­ழன் முதல் பள்­ளி­வா­சல்­களில் பாது­காப்­பான தூர இடை­வெ­ளிக் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றை­யில் இருக்­காது என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) திங்­க­ளன்று தெரி­வித்­தது.

மாற்­றங்­க­ளின் கீழ், உண­வ­கங்­களில் உணவு, பானம் உண்­ணா­த­போது முகக் கவ­சம் அணி­வது கட்­டா­யம். முகக்­க­வ­சம் அணி­யாத சூழல்­களில் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கட்­டா­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும். முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டிய சூழல்­களில் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறது. மேலும், இனி­மேல் எந்த ஒரு குறிப்­பிட்ட நேரத்­தி­லும் வீடு­க­ளுக்கு ஐந்து விருந்­தி­னர் வரை செல்ல முடி­யும்.

நிகழ்ச்சி வகைக்கு ஏற்ப இல்­லாது, இடத்­துக்கு ஏற்ப அதி­க­பட்ச நபர் வரம்பு கடைப்­பி­டிக்­கப்­படும். கூடு­த­லான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வெளி இடங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

கூடு­தல் செய்தி:

மாதங்கி இளங்­கோ­வன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!