நெகிழிப்பைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்

சிங்­கப்­பூ­ரில் உள்ள பெரும்­பா­லான பேரங்­கா­டி­கள் ஜூலை மாதம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து நெகி­ழிப் பைக­ளுக்­குப் பணம் வசூ­லிக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு நெகி­ழிப் பைக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் குறைந்­தது ஐந்து காசு செலுத்த வேண்­டி­வ­ரும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­முறை பயன்­ப­டுத்­தி­விட்டு வீசக்­கூ­டிய பொருள்­க­ளின் பயன்­பாட்­டைக் குறைக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களில் இது­வும் ஒன்று. வீடு­களில் மறு­சு­ழற்சி்ப் பழக்­கத்தை ஊக்­கு­விக்க முயற்­சி­ கள் எடுக்­கப்­படும் நிலை­யில் இந்­தப் புதிய நடை­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏறத்­தாழ 400 பேரங்­கா­டி­கள் நெகி­ழிப் பைக­ளுக்­குப் பணம் வசூ­லிக்­கும். இது சிங்­கப்­பூ­ரில் உள்ள மூன்­றில் இரண்டு பேரங்­கா­டி­க­ளுக்­குச் சமம்.

ஃபேர்பி­ரைஸ், கோல்ட் ஸ்டோ­ரேஜ், ஜயண்ட், ஷெங் சியோங், பிரைம் பேரங்­கா­டி­கள் ஆகி­யவை இவற்­றில் அடங்­கும்.

ஒரு­முறை பயன்­ப­டுத்தி வீசப்­படும் பைகள் நெகி­ழி­யால் செய்­யப்­ப­டா­மல் வேறு பொருள்­க­ளால் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அவற்­றுக்­குப் பணம் வசூ­லிக்­கப்­படும்.

ஒரு­முறை பயன்­ப­டுத்தி வீசப்­படும் பைக­ளுக்­கான விலை குறித்து கடந்த ஆண்டு முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­ட­போ­தி­லும் இத்­திட்­டம் ஜூலை 3ல் தொடங்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

“பேரங்­காடி உரி­மை­யா­ளர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­திய பிறகு பெரும்­பா­லான பேரங்­கா­டி­களில் ஒவ்­வொரு நெகி­ழிப் பைக்­கும் ஐந்து காசு வசூ­லிக்­கப்­படும் என்று இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது. நெகி­ழிப் பைக­ளுக்­குக் கூடு­தல் பணம் செலுத்­து­வ­தை­விட மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பைகளை வாடிக்­கை­யா­ளர்­கள் பேரங்­கா­டி­க­ளுக்­குக் கொண்டு செல்­வது நல்­லது,” என்று டாக்­டர் கோர் கூறி­னார்.

“நெகிழி, காகி­தம் அல்­லது மக்­கிப் போகும் தன்மை கொண்ட பொருள்­க­ளால் செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும் ஒரு­முறை பயன்­ப­டுத்தி வீசக்­கூ­டிய பொருள்­கள் தயா­ரிக்­கப்­ப­டும்­போ­தும் ஓரி­டத்­தி­லி­ருந்து இன்­னோர் இடத்­துக்­குக் கொண்டு செல்­லப்­ப­டும்­போ­தும் வீசப்­ப­டும்­போ­தும் சுற்­றுச்­சூ­ழ­லைப் பொறுத்தவரையில் தாக்கம் ஏற்படுத்துகின்றன,” என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சும் தெரி­வித்­தன.

கழி­வுப் பொருள்­கள் வீசப்­படும் இடங்­க­ளுக்­குக் கொண்டு சென்று வீசப்­ப­டு­வ­தற்கு முன்பு ஒரு­முறை பயன்­ப­டுத்தி வீசக்­கூ­டிய அனைத்­துப் பைகளும் மறு­சு­ழற்சி செய்­யப்­ப­டு­கின்­றன அல்­லது எரிக்­கப்­ப­டு­கின்­றன.

இத­னால் ஏற்­கெ­னவே எரிந்து சாம்பலாகக்கூடிய அல்லது எரிக்கப்படும் இப்­பொ­ருள்­க­ளால் இயற்­கை­யாக மக்­கிப்­போக முடி­யாது. மக்­கிப் போகும் தன்மை கொண்ட பைகள் என்­றாலே மறு­சு­ழற்சி செய்­யக்­கூ­டி­யவை என்­றா­கி­வி­டாது. இந்­நி­லை­யில், ஜூலை 3க்கு முன்பே நெகி­ழிப் பைக­ளுக்­குப் பேரங்­கா­டி­கள் பணம் வசூ­லிக்­க­லாம் என்று பச்­சைக் கொடி காட்­டப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே, கார்­டி­யன், வாட்­சன்ஸ், செவன் இல­வன் போன்ற சில்­லறை வர்த்­த­கங்­களும் சில பேரங்­கா­டி­களும் நெகி­ழிப் பைக­ளுக்­குப் பணம் வசூ­லிக்­கத் தொடங்­கி­விட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!