உல்லாசக் கப்பலில் அடுக்குமாடி குடியிருப்பை $300,000க்கு குத்தகைக்கு எடுத்த இளையர்

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் பணிபுரிபவர் ஆஸ்டின் வெல்ஸ், 28. வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரும் இவர், உல்லாசக் கப்பல் ஒன்றில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் குத்தகைக்கு எடுத்துள்ளார். 

தொலைதூரத்தில் இருந்தபடி பணி செய்துகொண்டே உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்காக அவர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளாராம். பெரிய உல்லாசக் கப்பலான எம்வி நரேட்டிவில் 500 தனி அறைகள் உள்ளன.

அந்தக் கப்பலில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பை 12 ஆண்டுகளுக்கு வெல்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் காணொளி அழைப்பு மூலம் வெல்ஸ் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “தினசரி வாழ்க்கையைக் கவனித்துக்கொண்டே புதிய இடங்களுக்குச் செல்வது உற்சாகமாக இருக்கும். என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயம் என்னவென்றால், உலகத்தைப் பார்க்க எனது அன்றாட வழக்கத்திற்கு இடையூறு ஏற்படாது.

வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், பையை பேக் செய்துகொண்டு, விமானத்தில் ஏறி, அறையை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

ஆனால், தற்போது எனது அடுக்குமாடிக் குடியிருப்பு, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவர்கள், மளிகைக் கடைகள் அனைத்தும் என்னுடன் உலகம் முழுவதும் சுற்றுகின்றன,” என்றார் வெல்ஸ்.

உல்லாசக் கப்பலின் அடுக்குமாடிக் குடியிருப்பை 12 ஆண்டுகளுக்கு US$300,000க்கு அவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். மிக ஆடம்பரமான அந்தக் கப்பலில், 11 விதமான குடியிருப்புகள் உள்ளன.

அந்தக் கப்பல், 1,970 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. நான்கு படுக்கையறைகள், ஓர் உணவு உண்ணும் அறை, இரண்டு குளியலறைகள், ஒரு மேல்மாடம் (பால்கனி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அந்தக் கப்பல் உலகம் முழுவதும் சுற்றி வரும் காலத்தில், குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அங்கு வசிக்க வெல்ஸ் திட்டமிட்டுள்ளார். உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, மருத்துவச் சேவை, 24 மணி நேர அறை சேவை ஆகியவற்றுடன் பணிபுரிவதற்கு என தனி அறையும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்த்துக்குச் சொந்தமான அந்தக் கப்பல் 2025ல் உலகப் பயணத்தை தொடங்க உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!