பெற்றோரை தொடக்கத்திலேயே கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லாததை எண்ணி ஆடவர் வருத்தம்

படம்: அன்ஸ்பிளேஷ்

திரு டியோ கீ ஹுவாட்டின் வயது முதிர்ந்த பெற்றோர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றபோதிலும் அவர்கள் அதைப் போட்டுக்கொள்ளவில்லை.

திரு டியோவின் தாயாருக்கு சில மருத்துவப் பிரச்சினைகள் உள்ளன. அவரது தாயார் மருத்துவர் ஆலோசனைகளை முதலில் முடித்துக்கொள்ள அவரது தந்தை விரும்பினார்.

அதன் பின்னார் ஒன்றாகச் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று திரு டியோவின் தந்தை எண்ணினார்.

எனினும், எதை நினைத்து திரு டியோ அஞ்சினாரோ அது நடந்துவிட்டது. எண்பதுகளில் உள்ள அவரது தந்தைக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. ஜூன் 1ஆம் தேதி தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மற்றோர் அதிர்ச்சி

ஐந்து நாள்கள் கழித்து திரு டியோவுக்கு மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது. எழுபதுகளில் உள்ள அவரது தாயாருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது. தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பொறியியல் துறையில் பணியாற்றும் 40களில் உள்ள திரு டியோ தி நியூ பேப்பர் நாளிதழிடம் கூறுகையில், “முதலில் எனது தந்தை குறித்து கவலைப்பட்டேன். எனது தாயாருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படும் என நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வாரம் கழித்து திரு டியோவின் தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அதேபோல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வாரம் கழித்து அவரது தாயாரும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

“எனக்குள் பயம் மேலோங்கியது. பின்னேரத்தில் மருத்துவர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. எனது தாயாரின் உடல்நிலை சரியில்லை என அவர்கள் என்னிடம் கூறினர்,” என்று நினைவுகூர்ந்தார் திரு டியோ.

ஒரு கட்டத்தில், திரு டியோவின் பெற்றோர் மூச்சுவிட அவர்களுக்கு செயற்கை சுவாசக்கருவிகள் தேவைப்பட்டன.

“எனது தந்தையுடன் தொலைபேசி மூலம் மட்டுமே என்னால் பேச முடிந்தது. எனது தாயார் பலவீனமாக இருந்தார். அவர்கள் இருவரும் தொடக்கத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் அவர்களிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்ற சிந்தனை மீண்டும் மிண்டும் எழுந்தது. அவ்வாறு நான் செய்திருந்தால், இது நடந்திருக்காது,” என்றார் திரு டியோ.

பின்னர் நிலைமை சற்று மேம்பட்டது. ஜூன் மாத நடுப்பகுதிவாக்கில் திரு டியோவின் தந்தையின் உடல்நலம் மேம்பட்டு பொதுப் படுக்கைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஜூலை இறுதியில் அவரது தாயாரும் பொதுப் படுக்கைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பாதிப்பிலிருந்து இருவரும் குணமடைந்துவிட்டனர். எனினும், மற்ற மருத்துவப் பிரச்சினைகளுக்காக டான் டோக் செங் மருத்துவமனையின் பொதுப் படுக்கைப் பிரிவில் அவர்கள் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“உங்களது அன்புக்குரியவர்கள் இந்த நிலையைக் கடந்து வருவதைப் பார்ப்பது உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம். ஒன்று மட்டும் கூறுகிறேன். கொவிட்-19 தொற்றை இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
திரு டியோ கீ ஹுவாட்
மூத்தோர்
தடுப்பூசி
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!