12ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர் ஹைதராபாத்தின் ஆகப்பெரிய பணக்காரரானார்

ஹைதராபாத்: 2017ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் விசாகப்பட்டினத்தில் உள்ள டிவி ஆய்வகங்களின் தயாரிப்புப் பிரிவு மீது இறக்குமதி எச்சரிக்கை விடுத்தபோது, பல ‘பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குச் சென்றன.

காரணம்: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒப்பந்த மேம்பாடு மற்றும் உற்பத்தி அமைப்பு (சிடிஎம்ஓ) நப்ராக்ஸின் (ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்), டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் (இருமல் அடக்கி), காபாபென்டின் (மனச் சோர்வைக் கட்டுப்படுத்தும்) மற்றும் லெவெடிரேசிடம் (வலிப்பு) போன்ற மருந்துகளுக்கான பொருட்களுக்கு மிகப்பெரிய விநியோகஸ்தராக இருந்தது.

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் விலக்குகளை வழங்கியதுடன் இறக்குமதி எச்சரிக்கையும் ஆறே மாதங்களில் நீக்கப்பட்டது. இது எந்தவொரு நிறுவனத்திற்கும் மிகக் குறைவான காலகட்டமாகும். டிவி ஆய்வகங்களின் நிறுவனரும் அதன் நிர்வாக இயக்குநருமான டாக்டர் முரளி கிருஷ்ண பிரசாத் டிவியின் தொழில்முனைவு பயணத்தில் இது ஒரு முக்கியத் தருணம்.

“எங்கள் தயாரிப்புகளில் மற்றவர்கள் நுழைவது மிகவும் கடினம் என்ற அளவுக்கு நாங்கள் வேதியியலில் தேர்ச்சி பெற்றோம்,” என்று டிவி கூறுகிறார்.

இன்று, டிவி ஆய்வகமானது உலகளவில் முதல் மூன்று ஏபிஐ உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்த வெற்றியானது ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் டிவியை உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது, டிவி ஆய்வகம் ஒரு பங்குக்கு ரூ.5,425 என்ற அளவை எட்டிய பின்னர், 2021 அக்டோபரில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.75,000 கோடியை எட்டியது. இது பெரும்பாலும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ‘மோல்னுபிரவீர்’ ஒருமுறை வாய்ப்பால் உந்தப்பட்டது.

2003ல் ஒரு பங்குக்கு ரூ.140 என்ற விலையில் ரூ.45 கோடி ஐபிஓ மற்றும் விற்பனைக்கு வந்த இந்த நிறுவனத்தில் டிவி குடும்பம் கிட்டத்தட்ட 52% பங்குகளைக் கொண்டுள்ளது.

ஆனால் தோல்வி இல்லாமல் இந்த வெற்றி வரவில்லை. டாக்டர் டிவி தமது 12ஆம் வகுப்புத் தேர்வை புறக்கணித்தது மட்டுமல்லாமல், அவர் தமது முதல் ஆண்டு பி.ஃபார்ம் தேர்விலும் தேர்ச்சியடையத் தவறிவிட்டார்.

தோல்வியைச் சுவைத்த அவர், பின்னர் தமது பி.ஃபார்ம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்.ஃபார்ம் கல்வியை முடித்து, 1975ல் வார்னர் இந்துஸ்தான் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.

டாக்டர் கல்லம் அஞ்சி ரெட்டியின் முதல் தொழில்முனைவு நிறுவனமான ‘யூனிலாய்டுஸ்’ உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு விரைவில் கிடைத்தது.

டாக்டர் டிவி தனது பாக்கெட்டில் வெறும் 7 டாலருடன் தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்தார்.

“அந்தக் காலத்தில் நீங்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அந்நியச் செலாவணி அவ்வளவுதான்,” என்று அவர் கூறுகிறார்.

1983ல் குடும்ப நெருக்கடிநிலை காரணமாக டாக்டர் டிவி ஹைதராபாத் திரும்பினார். மருந்து மற்றும் வேதிப் பொருள்களில் அனுபவம் கொண்ட அவர், டாக்டர் அன்ஜி ரெட்டியை மீண்டும் சந்தித்தார்.

இன்று, டிவி ஆய்வகங்கள் ஒரு கடன் இல்லாத நிறுவனமாக உள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ.4,000 கோடி என டாக்டர் டிவியின் மகளும் நிறுவனத்தின் முழுநேர இயக்குனருமான (வணிக) நிலிமா எஸ்.டிவி சொல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!