சேவல் முட்டை கேட்ட வாடிக்கையாளர், அதிர்ச்சியில் கடைக்காரர்

மலேசியாவில் கோழிச் சோறு (chicken rice) விற்கும் கடைக்கு வந்த கோரிக்கையைக் கேட்டு மலைத்துவிட்டார் அந்த கடையின் உரிமையாளர்.


இப்போதெல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே உணவைக் கொண்டு வரும் 'கிராப்', 'ஃபுட்பாண்டா' போன்ற உணவு விநியோக சேவைகள் வழக்கமாகிவிட்டன. இந்தியாவில் 'சுவிகி' நிறுவனம் இதற்கு பிரபலம்.


பல சமயம் இதில் சர்ச்சைகளும் எழுவதுண்டு. சில சமயம் உணவைத் தாமதமாகக் கொண்டு வருகிறார்கள் என உணவு விநியோக ஊழியர்களை வாடிக்கையாளர்கள் சாடுவதுண்டு.
சில சமயம் வாடிக்கையாளர்கள் வினோதமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என உணவுக் கடைக்காரர்கள் சாடுவதுண்டு. அதுவும் சில வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதைவிட அவர்கள் ஏற்காமலே இருக்கலாம்.


இங்கு அதுபோல பல கோரிக்கைகளை முன்வைத்த ஒரு வாடிக்கையாளரின் பதிவு இணையத்தில் பிரபலமாகி வந்துள்ளது.


ஆசியாவில் குறிப்பாக சிங்கப்பூர் மலேசியாவில் பிரபலமானது கோழிச்சோறு (சிக்கன் ரைஸ்). மலேசியாவில் ஒரு வாடிக்கையாளர் 'ரோஸ்டர் சிக்கன் ரைஸ்' கடையில் 'ஃபுட்பாண்டா' செயலி மூலம் கோழிச்சோறு வாங்க முற்பட்டிருக்கிறார்.


அவர் வாங்கியது என்னவோ இரண்டு கோழிச்சோறு பொட்டலங்கள், இரு 'மரினேட்டட்' (marinated) முட்டைகள். ஆனால் அதற்காக 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் அவர். அவரது கோரிக்கைகள் இதோ:


1. கோழி எலும்பு அகற்றப்படவேண்டும். எலும்பு கடித்தால் என் பற்கள் வலிக்கும்
2. மிளகாய்ச் சாறு சுவையாக இருக்கிறது, எனக்கு 9 பொட்டலங்கள் வேண்டும். நன்றி.
3. கூடுதல் ஸ்பிரிங் அனியன்ஸ்(spring onions). அதுவும் புதிதாக இருக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு உடல் உபாதைகள் ஏற்படும்
4. சாற்றை சோற்றுடன் கலக்காமல் தனியாகத் தரவும். இல்லையென்றால் சோறு குழைந்துவிடும்.
5. சோற்றை தாளில் மடிக்கவேண்டாம். சுவை இருக்காது.
6. கொஞ்சம் அஸாம் 'சூப்' கொடுத்தால் சிறப்பு. இதற்கு முன்னால் தந்துள்ளீர்கள். எனக்கு மூன்று வேண்டும்.
7. சுவைத்துப்பார்க்க கோழி பாதம் கொடுக்க முடியுமா?
8. ஸ்பூன் கொடுக்க மறக்காதீர்கள்.
9. என் உணவை 5 நிமிடத்தில் தயார் செய்துவிடுங்கள் ஏனெனில் எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.
10. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இப்படியெல்லாம் கட்டுப்பாடுகளும் கோரிக்கைகளும் முன்வைத்த வாடிக்கையாளர் அடுத்து கேட்டதுதான் கடைக்காரரைத் திக்குமுக்காட வைத்தது.


அவர் கேட்ட இரு முட்டைகள் சேவல் முட்டைகளாக இருக்கவேண்டுமாம். அவை சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால்தானாம்.


அந்தோனி டே என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இதனைப் பதிவிட்டிருந்தார். முழுமையாக சீனத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கோரிக்கைகளை 'தி மதர்‌ஷிப்' இணையத்தளம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தது.


வாடிக்கையாளருக்கு சேவல் முட்டை கிடைத்ததா என்பதுதான் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!