ஊடக வர்த்தக உருமாற்றத்தில் எஸ்பிஎச்சின் தொடர் முதலீடு

கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் ஊடக வர்த்­த­கத்­தின் மீதும் உள்ள நிலை­யில், சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) தொடர்ந்து ஊடக வர்த்­தக உரு­மாற்­றத்­திற்­காக முத­லீடு செய்­யும் என்று தெரி­வித்­துள்­ளது.

இந்த உரு­மாற்­றம் பய­னா­ள­ரின் மாறி­வ­ரும் பாணிக்கு ஏற்ப அமைந்­தி­டும் என்று நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி இங் யாட் சுங் நேற்று நடை­பெற்ற வரு­டாந்­திர பொதுக் கூட்­டத்­தில் கூறி­னார். நிறு­வ­னத்­தி­டம் உள்ள சொத்­துப் பிரி­வு­க­ளால் கிடைக்­கும் வரு­மா­னத்­தில் தொடர்ந்து வளர்ச்சி உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“சவால்­மிக்க நிலையை எஸ்­பி­எச் தற்­போது சந்­தித்து வரு­கிறது. எங்­கும் உள்ள செய்தி ஊட­கத் துறை­யில் தடை­க­ளாக ஏற்­பட்டு வரும் துரி­த மாற்­றங்­கள் நம்மையும் விட்­டு­வைக்­க­வில்லை. பய­னா­ளர்­க­ளின் பழக்­க­வ­ழக்­கங்­கள் மாறு­கின்­றன. அத்­து­டன் மேலும் அதி­க­மா­னோர் மின்­னிலக்க ஊட­கத்­திற்கு மாறி வரு­கின்­ற­னர்.

“இத­னால் அச்சு ஊட­கம் தொடர்­பி­லான விளம்­ப­ரப் பிரி­விலும் சந்­தா­தா­ரர் வரு­வா­யி­லும் நிலை­யான ஒரு சரிவை நம் ஊடக வர்த்­த­கம் சந்­தித்து வரு­கிறது. வழக்­க­மாக நமது ஆகப்­பெ­ரிய வரு­வாய் மற்­றும் லாப கார­ணி­கள் இவை. ஆனால் இவ்­வாண்டு கொவிட்-19 கொள்ளை நோய் இச்­ச­வால்­களை மேலும் மோச­மாக்­கி­விட்­டது,” என்று திரு இங் தெரி­வித்­தார்.

அடுத்த நிலைக்கு முன்­னே­றும் பொருட்டு நிறு­வ­னம் அதன் சொத்­துப் பிரி­வி­லி­ருந்து கிடைக்­கும் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கச் செய்­யும் உத்­தி­யைக் கையா­ளும் என்­றார் அவர். தொழில்­நுட்ப ஆற்­றல்­க­ளுக்­குப் புத்­து­யிர் ஊட்­டு­வது, புதுப்­பிப்­பது போன்ற ஊடக உரு­மாற்ற முயற்­சி­யி­லும் தொடர்ந்து நிறு­வ­னம் நாட்­டம் செலுத்­தும் என்று கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!