பொருள், சேவை விநியோகம் தொடர்வதை சிங்கப்பூரும் மலேசியாவும் உறுதிப்படுத்தும்

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகள் அமலாகும் என்று மலேசியா நேற்று (மே 28) அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து சென்று வருவதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

என்டியுசி ஃபேர்பிரைஸ் பினாய் விநியோக நிலையத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் இவ்வாறு கூறியதாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று (மே 29) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி பேரங்காடிகள் உலக சூழ்நிலையையும் வட்டார சூழ்நிலையையும் சென்ற ஆண்டு முதலே அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தேவை எனில் விரைந்து செயல்பட்டு உணவு, அத்தியாவசிய பொருட்கள் இருப்பை அவை பலப்படுத்தி வந்துள்ளன என்றும் திரு கான் கூறினார்.

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்த கடுமையாகப் பாடுபடும் தளவாட போக்குவரத்து நிபுணத்துவர்கள், பேரங்காடி ஊழியர்களுக்கு அவர் நன்றி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!