கேளிக்கைக் கூடங்கள் மீண்டும் திறப்பு: மும்முரமாய் தயாராகும் உரிமையாளர்கள்

கேளிக்கைக் கூடங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதியன்று திறக்கவிருக்கின்றன.

கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, மதுபானக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், கரவோக்கே (karaoke) என அனைத்து இரவு நேர பொழுதுபோக்கு இடங்களும் மீண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதியன்று திறக்கவிருக்கின்றன.

இந்த அறிவிப்பை கேளிக்கைக் கூடங்களின் உரிமையாளர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றபோதிலும் இன்னும் இரு வாரங்களில் மீண்டும் வர்த்தகத் தொடங்குவதற்கான பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும் என்ற கவலையும் உள்ளதாகக் கூறினார்.

டெய்சி மொர்கன் இவ்வணிகத்தில் பல ஆண்டுகளாக ஈடுபடுவது சாதாரண விஷயமல்ல என்றார். புதிய கேளிக்கைக் கூடங்களை அவசரப்படமால் நிதானமாக சில மாதங்களில் முறையாக திறக்க விரும்புகிறார்.

"உங்கள் கேளிக்கைக் கூடங்கள் எப்போது திறக்கும் என பல வாடிக்கையாளர்கள் தொடர்புகொண்டு கேட்டது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது," என்றார் டெய்சி.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன்னர் உள்ளூர் பாடகர்களின் சிறப்பு படைப்புகளைக் கேட்கவும் தமிழ் பாடல்களை ரசித்து நடனமாடவும் தமிழர்கள் அதிகம் விரும்பி சென்ற இடம் ‘வெர்ல்ட் மியூசிக்’. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாவிட்டாலும், இடத்துக்கு வாடகை கட்டி வரும் 40 வயது திரு அழகன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய பரபரப்பாக செயல்படுகிறார்.

ஈராண்டு கால இழப்பை ஈடுகட்ட உடனடியாக செயலில் இறங்கியுள்ளார் ‘ஓல் ஸ்கூல்’ கேளிக்கை உணவகத்தின் உரிமையாளர் திலீப் குமார், 35. “கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில் இந்த வர்த்தகத்தை குடும்ப உணவகமாக மாற்றினோம். மீண்டும் இடத்தை பழையபடி கேளிக்கை கூடமாக்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். காற்பந்தாட்ட ரசிகர்களுக்காகவும் நாங்கள் புதிதாக தொலைக்காட்சி திரைகளைப் பொருத்துகிறோம்,” என்றார் திரு திலீப்.

கேளிக்கைக் கூடங்களின் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அவற்றின் டிஜே (டிஸ்க் ஜொக்கி) கலைஞர்களும் தங்கள் பணிகளுக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மீண்டும் வேலையைத் தொடங்க ஆர்வத்துடன் உள்ளார் கேளிக்கைக் கூடங்களில் அறிவிப்பாளராகச் செயல்படும் திரு விமல். கொவிட்-19 கிருமித் தொற்றுச் சூழலில் கேளிக்கைகூட வேலை பாதிக்கப்பட்டாலும் ஒலி 96.8, டிக்டாக் போன்ற தளங்களில் தொடர்ந்து பங்கெடுத்த இவர், தமது அறிவிப்புப் பணிகளைத் தொடர்ந்தார்.மீண்டும் ஈராண்டுகளுக்குப் பிறகு புதிய இசையோடு திரும்ப உற்சாகத்துடன் உள்ளார் விமல்.

இரவு நேர கேளிக்கைக் கூடங்களுக்குச் செல்வோர் அக்கூடங்களின் உள்ளே இருக்கும்போது முகக்கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும். வெளியில் முகக்கவசம் அணியாமலிருக்கும்போது மக்கள் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் கேளிக்கைக் கூடங்களினுள் நுழைவதற்கு முன்னர் ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனையை (ART) செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!