பொஃப்மா

முன்னாள் சிறைக்கைதி ஜேம்ஸ் ராஜ் ஆரோக்கியசாமி தான் சிறையில் நடத்தப்பட்ட விதம் குறித்துத் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக அவருக்கு பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்தினத்திற்கு, ‘பொஃப்மா’ எனப்படும் பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் நான்காவது முறையாகத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஏஷியா சென்டினல்’ இணையத்தளத்தின் கட்டுரை ஒன்றிலும் அதன் பிரதான இணையப் பக்கத்திலும் திருத்தம் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பொய்யுரை பரவிய அதே அளவுக்கு திருத்தக் குறிப்பும் வாசகர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரிடவ்ட் ரோடு பங்களாக்களை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்த விவகாரத்தின் தொடர்பில் சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுக்கு பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கிறிஸ்டஃபர் டி சூசா, தொழில்முறை முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.